ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
முகவரி
அழகப்பம்பாளையம்
சேலம், தமிழ் நாடு, 637102
 இந்தியா
அமைவிடம்11°34′59″N 77°57′07″E / 11.583167°N 77.951967°E / 11.583167; 77.951967
தகவல்
வகைஅரசினர் பள்ளி
நிறுவல்1987
பள்ளி அவைநடுநிலை
வகுப்புகள்8
கற்பித்தல் மொழிதமிழ்,ஆங்கிலம்

அழகப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள அழகப்பம்பாளையம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியாகும்.

நிர்வாகம்[தொகு]

தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கொங்கணாபுரம் வட்டார கல்வி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது. மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்[தொகு]

இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் மூன்று இடைநிலை ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

கற்றல் முறைகள்[தொகு]

இப்பள்ளியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய கற்பித்தல் முறையிலும் நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையிலும் கற்பித்தல் நடைபெறுகிறது. விளையாட்டு வழிக் கல்வி, கணினி வழிக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் நன்னலக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

செயல்பாடுகள்[தொகு]

இப்பள்ளியில் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும் சுகாதாரத்தை பேணவும் பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மன்ற செயல்பாடுகள்[தொகு]

பள்ளியில் பல்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவையாவன

விழாக்கள்[தொகு]

அழகப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

பள்ளியின் படிமத் தொகுப்பு[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]