ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரங்கிராம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அரங்கிராம்பட்டி பள்ளியானது இந்தியாவின் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம் வி.லெட்சுமிபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது. இப்பள்ளியானது இயற்கையான சூழலில் இரண்டு ஆசிரியர்களோடு செயல்பட்டு வருகிறது.

குடியரசு நாள் கொண்டாட்டம்

நிர்வாகம்[தொகு]

இப்பள்ளியானது திருமயம் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவர் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிது. தொடக்கக் கல்வி துறையின் கீழ் செயல்படுகிறது.

சிறப்புகள்[தொகு]

ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் கொண்ட இரண்டு வகுப்பறைக் கட்டிடத்தில், இயற்கை எழில்சூழ்ந்த நிலையில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கும் அனைத்து விலையில்லா சீருடை, புத்தகம், புத்தகப்பை, குறிப்பேடு, கலர் பென்சில், கணித உபகரணப்பெட்டி போன்றவை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

கற்றல் கற்பித்தல் முறைகள்[தொகு]

எளிய படைப்பாற்றல் முறைகளைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது.

மாணவர்கள்[தொகு]

இப்பள்ளியில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றன. அரங்கிராம்பட்டி கிராம குழந்தைகள் இங்கு கல்வி பயில்கின்றனர்.