ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அம்மன்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அம்மன்பேட்டை 1956 சனவாி திங்கள் 7 ஆம் நாள் துவங்கப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 1 தலைமையாசிரியர் மற்றும் 1 இளநிலை இடைநிலை ஆசிாியா் என இருவா் பணியாற்றி வருகின்றனா். இப்பள்ளியில் 33 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

அமைவிடம்=[தொகு]

அம்மன்பேட்டை ஊராட்சி ஒன்றிய தாெடக்கப்பள்ளி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ளது. இப்பள்ளி புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் மேலுாா் கிராமத்திலிருந்து சுமாா் 4 கி.மீ தொலைவி்ல் அமைந்துள்ளது.

கல்விமுறை[தொகு]

ஒன்று முதல் நான்கு வகுப்பு வரை உள்ள மாணவா்கள் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறையிலும். ஐந்தாம் வகுப்பு மாணவா்கள் எளிய படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி பயின்று வருகின்றனா். மேலும் விளையாட்டு வழிக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் நன்னலக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

நிர்வாகம்[தொகு]

தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தாெடக்கப்பள்ளி அன்னவாசல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலாின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.

செயல்பாடுகள்[தொகு]

இப்பள்ளியில் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும் சுகாதாரத்தை பேணவும் பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]