ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, இராமம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப் பள்ளி, கோவை மாவட்டம், ஜடையம்பாளயம் ஊராட்சிக்குட்பட்ட இராமம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்பப்பள்ளி. இப் பள்ளி கோயம்புதூரிலிருந்து 38 கிமீ தொலைவில், மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் வழியில் 5 கி.மீ தொலைவில், காரமடை-சிறுமுகை சாலையில் அமைந்திருக்கிறது. 1930 ஆம் ஆண்டு இப் பள்ளி தொடங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர், கல்வித்துறை உயர் அதிகாரிகள், அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் மற்றும் பலர் வந்து பார்த்து செல்லும் மாதிரிப் பள்ளியாக இந்த ஆரம்பப் பள்ளி உள்ளது..

ஆசிரியர்களின் முயற்சியும் கிராமத்தினரின் ஒத்துழைப்பும்[தொகு]

2011 ஆம் கல்வியாண்டில், இப்பள்ளியின் ஆசிரியர் ஃப்ராங்க்ளின் மற்றும் தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆகிய இருவரின் முயற்சியால், குழந்தைகளின் வகுப்பறைகள் நவீனப்படுத்தப்பட்டன. இவர்கள் மேல் நம்பிக்கை கொண்ட கிராமத்தினரின் கிராமக் கல்விக் குழுவினரும் இவர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.[1]

பள்ளியில் உள்ள வசதிகள்[தொகு]

  • முனைகளில் இடிக்காமல் படிக்க வட்ட மேஜைகள்
  • குளிரூட்டப்பட்ட வகுப்பறை
  • கணிணி ஆய்வகம்
  • டைல்ஸ் கிரானைட் கொண்ட தரை
  • நவீன ஒலிபெருக்கிகள்
  • வகுப்பில் சாதாரண மற்றும் வெந்நீர் குடிநீருக்கு தனித்தனி குழாய்
  • மாணவர்களுக்கு எழுத பச்சை வண்ணப்பலகை
  • முதலுதவிப் பெட்டி, எல்.சி.டி புரொஜெக்டர், டிவிடி சாதனம்

குழந்தைகளுக்கு, யோகா பயிற்சி, ஓவியப் பயிற்சி, விளையாட்டு, செய்தித்தாள் வாசிப்பு பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி, சேமிக்க பயிற்சி என்று பல விதங்களில் பயிற்சி தரப்பட்டு, அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியரின் அங்கீகாரம்[தொகு]

கோவை மாவட்ட ஆட்சியர் இந்த நவீனமாக்கலை மாவட்டத்தின் பிற பள்ளிகளுக்கும் விரிவாக்கப்படுத்த, ஆனைக்கட்டி, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் உட்பட்ட நான்கு பள்ளிகளை சீரமைக்க உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]