ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அ. தாழையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
முகவரி
தாழையூர்
சேலம், தமிழ் நாடு, 637 102
இந்தியா
தகவல்
வகைஅரசினர் பள்ளி
நிறுவல்1954
பள்ளி அவைதொடக்கநிலை
வகுப்புகள்5
கற்பித்தல் மொழிதமிழ், ஆங்கிலம்

அ. தாழையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் உள்ளது. அ. தாழையூர் (அக்ரகார தாழையூர்) ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 1954 ஆகஸ்ட் திங்கள் 8-ஆம் நாள் துவங்கப்பட்டது. இப்பள்ளிக்கு தேவையான நிலத்தை இவ்வூரை சேர்ந்த திரு. கந்தசாமி கவுண்டர் தானமாக வழங்கினார். பிறகு 1961 ஏப்ரல் திங்கள் 19-ஆம் நாள் தமிழக அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போதுவரை 12 தலைமையாசிரியர்கள் பணியாற்றியுள்ளனர். இப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை-47ற்கும், சேலம்-ஈரோடு இருப்புப்பாதைக்கும் மிக அருகில் மகுடஞ்சாவடியில் இருந்து சங்ககிரி செல்லும் வழியில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மகுடஞ்சாவடி உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.ஒன்று முதல் வகுப்பு இப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்[தொகு]

இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கற்றல் முறைகள்[தொகு]

இப்பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை செயல் வழிக்கற்றல் முறையிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி முறையில் கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது. விளையாட்டு வழிக் கல்வி,கணினி வழிக் கல்வி,சுற்றுச்சூழல் கல்வி மற்றும் நன்னலக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

செயல்பாடுகள்[தொகு]

இப்பள்ளியில் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும் சுகாதாரத்தை பேனவும் பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மன்ற செயல்பாடுகள்[தொகு]

பள்ளியில் பல்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவையாவன

விழாக்கள்[தொகு]

பள்ளியில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

  1. பள்ளி ஆண்டு விழா
  2. விளையாட்டு விழா
  3. கல்வி வளர்ச்சி நாள் விழா (காமராசர் பிறந்த தினம்)
  4. குழந்தைகள் தின விழா
  5. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
  6. உலக யோகா தினம்
  7. பொங்கல் தமிழர் திருநாள்