ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, நெடுவாசல்
Jump to navigation
Jump to search
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி என்பது தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஓர் அரசுப்பள்ளி ஆகும்.இங்கு 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன.இப்பள்ளி புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னிறைவு பெற்ற தொடக்கப்பள்ளியாக திகழ்கிறது.பள்ளியின் தலைமை ஆசிரியர் கருப்பையன் என்பவரின் சீரிய முயற்சிகளே பள்ளியின் முன்னேற்றத்திற்கு காரணமாக விளங்குகிறது.
பள்ளியின் செயல்பாடுகள்[தொகு]
- மொழி ஆய்வகத்தின் மூலம் மாணவர்களுக்கு மொழித்திறன் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் மொழி ஆய்வகம் உள்ள ஒரே அரசுத் தொடக்கப்பள்ளி இதுவே ஆகும்.
- கணினி மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது.
- சமுதாயத்துடன் இணைந்த பள்ளியாக செயலாற்றுகிறது.
- 10 நட்சத்திர விருதுபெற்ற பள்ளியாகவும் இப்பள்ளி திகழ்கிறது.