ஊத்துக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊத்துக்காடு
—  கிராமம்  —
ஊத்துக்காடு
இருப்பிடம்: ஊத்துக்காடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°47′27.1″N 79°49′16.8″E / 12.790861°N 79.821333°E / 12.790861; 79.821333ஆள்கூறுகள்: 12°47′27.1″N 79°49′16.8″E / 12.790861°N 79.821333°E / 12.790861; 79.821333
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி .து[4]
மக்கள் தொகை

அடர்த்தி

4,528 (2011)

519/km2 (1,344/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

8.73 சதுர கிலோமீட்டர்கள் (3.37 sq mi)

74.4 மீட்டர்கள் (244 ft)

ஊத்துக்காடு (Uthukadu) தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் வட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியத்தில், உள்ள சிறிய கிராமம் ஆகும்..[5][6][7][8][9]

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 48, ஊத்துக்காடு வழியாக செல்கிறது. ஊத்துக்காட்டுக்கு 4.5 கி.மீ தொலைவில் வாலாஜாபாத் பேரூராட்சியும், 19.7 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் நகராட்சியும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை 67.7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நடைபெறும் விழாக்கள்[தொகு]

ஊத்துக்காட்டில் பல்வேறு ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு திருவிழா என பல்வேறு காலங்களில் நடைபெறுகிறது.

ஊத்துக்காட்டில் உள்ள ஆலயங்களின் பெயர்கள் பின்வருமாறு.

 • எல்லையம்மன் ஆலயம்,
 • பெருமாள் ஆலயம்,
 • விநாயகர் ஆலயம்,
 • மகாலிங்கேஸ்வரர் ஆலயம், என இன்னும் பல,.
அருள்மிகு எல்லம்மன் ஆலய முன்தோற்றம்

பள்ளிக்கூடம்[தொகு]

ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி 1968-ல்[10] ஆரம்பிக்கப்பட்டது. ஆண், பெண் என இருபாலரும் படிக்கும் இந்தப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாறியது.

மக்களின் சராசரி கல்வியறிவு 76.12% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84.17%, பெண்களின் கல்வியறிவு 67.82% ஆகும்.

போக்குவரத்து[தொகு]

புத்தகரம் (டி 1) அரசு பேருந்து, சின்னிவாக்கம் அரசு பேருந்து, பிரசன்னா தனியார் பேருந்து மற்றும் காமாட்சி சிற்றுந்து ஆகியவை ஊத்துகாட்டுக்கு இயக்கப்படுகின்றன. இவைமட்டுமல்லாமல் 2.2 கி.மீ தூரத்தில் உள்ள கூட்டுச்சாலையில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 79, 579A பேருந்து வசதி காஞ்சிபுரம், சென்னைக்கு உண்டு.

வழித்தடங்களின் பட்டியல்[தொகு]

சாதாரண பேருந்துகள் விரைவு பேருந்துகள் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் குளிர்சாதனப் பேருந்துகள்

விளக்கம்: அ.வ- அதிக எண்ணிக்கையிலான வழித்தடங்கள், கு.வ – குறைந்த எண்ணிக்கையிலான வழித்தடங்கள்

தடம் புறப்படும் இடம் செல்லும் இடம் வழி அ.வ கு.வ
T1 காஞ்சிபுரம் புத்தகரம் சின்ன காஞ்சிபுரம், ஐயம்பேட்டை, கருக்குப்பெட்டை, வாலாஜாபாத் x
பிரசன்னா காஞ்சிபுரம் ஊத்துக்காடு சின்ன காஞ்சிபுரம், ஐயம்பேட்டை, கருக்குப்பெட்டை, வாலாஜாபாத் x
காமாட்சி சங்கராபுரம் ஊத்துக்காடு புளியம்பாக்கம், வாலாஜாபாத் x
579A தாம்பரம் வாலாஜாபாத் முடிச்சூர், படப்பை, ஓரகடம், வாரணவாசி, நத்தாநல்லூர் x
79 காஞ்சிபுரம் தாம்பரம் ஐயம்பேட்டை, வாலாஜாபாத், நத்தாநல்லூர், வாரணவாசி, ஓரகடம், படப்பை, முடிச்சூர் x
79EXP காஞ்சிபுரம் தாம்பரம் ஐயம்பேட்டை, வாலாஜாபாத், வாரணவாசி, ஓரகடம், படப்பை, முடிச்சூர் x

தொழில்[தொகு]

பெரும்பாலான மக்களுக்கு விவசாயமே தொழிலாகும். ஆனால் இன்று விவசாயம் மெல்ல அழிந்து கட்டுமான தொழில் மேலோங்க தொடங்கியுள்ளது.

மதம்[தொகு]

90 சதவீதம் இந்து மத மக்கள்.

அருகில் உள்ள கிராமங்கள், நகரங்கள்[தொகு]

பெயர் தூரம்
புத்தகரம் 3.9 கி.மீ
நாயக்கன் குப்பம் 1.9 கி.மீ
நெய்குப்பம் 5.0 கி.மீ
கட்டவாக்கம் 4.2 கி.மீ
தென்னேரி 5.0 கி.மீ
நத்தாநல்லூர் 5.6 கி.மீ
வாலாஜாபாத் 4.5 கி.மீ
காஞ்சிபுரம் 19.7 கி.மீ
தாம்பரம் 39.4 கி.மீ

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. Arasakumar Thirunavukkarasu, Mr.. "Kanchipuram Village Panchayat Presidents list 2011". Website. District Administration, Kancheepuram. பார்த்த நாள் 25 July 2013.
 5. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03&centcode=0004&tlkname=Kancheepuram%20%20330304
 6. http://tnmaps.tn.nic.in/district.php
 7. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Walajabad&region=2&lvl=block&size=1200
 8. http://censusindia.gov.in/(S(y2uup455qkm5b545nmkfyoni))/NprStateReport.aspx?stcd=33&distcd=03&tslcode=006
 9. Arasakumar Thirunavukkarasu, Mr.. "National Population Register 2011". Website. Census Of India. பார்த்த நாள் 17 June 2013.
 10. http://www.schoolsworld.in/schools/showschool.php?school_id=33030201903

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊத்துக்காடு&oldid=3062140" இருந்து மீள்விக்கப்பட்டது