ஊது குழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊது குழல் என்பது கிராமத்தில் மண் அடுப்புகள் எரியூட்டும்போது அடுப்பு தற்காலிக இடர்பாட்டினால் அனைந்துவிட்டால் அடுப்பினை மீண்டும் எரியூட்டுவதற்கு இந்த ஊது குழல் பயன்படுகிறது. இவை மூங்கில் மற்றும் இரும்பு குழாய்கலினால் உருவாக்கப்படுகிறது. பயன்படாமல் இருக்கும் இரும்புக்குழாய்கள் சுமார் ஒன்று முதல் இரண்டு அங்குலம் அகலம் உள்ள இரும்பு மற்றும் இதர உலோகங்களினால் தாயார் செய்யப்பாடுகிறது. இவற்றின் நீளம் இரண்டு முதல் மூன்று அடி வரை உள்ளது. இதன் உயரம் அடுப்புகளை ஊதுவதற்கு ஏதுவாகவும் அதன் வெப்பத்திலிருந்து அடுப்பெரிக்கும் நபரை காக்கும் விதமாகவும் உள்ளது. இந்த ஊது குழல் வழியாக வாயின் மூலம் காற்றை ஒருமுகமாக குழலின் வழியாக செலுத்தி அனைந்த அடுப்பினை மீண்டும் எரியூட்ட வழிவகையாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊது_குழல்&oldid=2801911" இருந்து மீள்விக்கப்பட்டது