ஊணாங்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊணாங்கொடி

ஊணாங்கொடி அல்லது ஓணாங்கொடி (Ipomoea staphylina) என்பது கன்வால்வுலேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும். இது தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படும் கொடி தாவரமாகும். இது புதர்கள், காடுகளின் ஓரங்கள், வேலிகள், சாலையோரங்களில் வளரக்கூடியது. இது இந்தியா இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. கால்நடைகள் இத்தாவரத்தின் இலைகளை உண்ணும். இந்தக் கொடி விறகு கட்டுவதற்கு கயிற்றாக பயன்படுகிறது. இது பொதுவாக நீர் ஆதாரங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடியது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Ipomoea staphylina Roem. & Schult". India Biodiversity Portal. Archived from the original on 1 Haziran 2017. பார்க்கப்பட்ட நாள் 26 Ekim 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊணாங்கொடி&oldid=3928110" இலிருந்து மீள்விக்கப்பட்டது