ஊட்டச்சத்து சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊட்டச்சத்து சங்கம்
சுருக்கம்AfN
நோக்கம்ஊட்டச்சத்து ஆய்வு
சேவைப் பகுதிஐக்கிய இராச்சியம்
முதன்மைச் செயலர்
லியோனி மில்லினெர் (Leonie Milliner)

ஊட்டச்சத்து சங்கம் (Association for Nutrition-AfN) ஐக்கிய இராச்சியத்தில் செயற்பட்டுவரும் ஒரு சங்கமாகும். இச் சங்கம் ஒரு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஆகும். இச்சங்கமானது ஐக்கிய இராச்சிய உணவியல் வல்லுநர் பதிவேட்டின் (UKVRN) பொறுப்பாளராக உள்ளது.[1] "அனைத்துநிலைகளிலும், ஆதாரத்துடன் கூடிய வழிமுறைக்கொண்டு ஊட்டச்சத்துக் குறித்த விஷயங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பதும் பலனடையமாறு பார்த்துக்கொள்வதே" இதன் நோக்கம் ஆகும்.

ஐக்கிய இராச்சியத்தின் பல முக்கிய அமைப்புகளால் இச்சங்கம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2][3][4] NCS தேசிய தொழில் சேவை [5] இவ்வமைப்பின் தலைமைச் செயலர் லியோனி மில்லினெர் ஆவார்.

பதிவேடு[தொகு]

இச்சங்கத்தில் பதிவு செய்துள்ள உணவியல் வல்லுநர்கள் அனைவரும் தங்களுடைய பயிற்சி மற்றும் தொழில்முறை ஊட்டச்சத்து அனுபவம் பெற்ற சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். தரமான நெறிமுறை, நடத்தை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் செயற்படவேண்டும்[6] இதன் உறுப்பினர்கள் மூன்று பிரிவுகளில் உள்ளனர், பொது சுகாதாரத்தில் ஊட்டச்சத்துச் சிறப்புடன் பதிவுசெய்யப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் (RNutr), ஊட்டச்சத்து அறிவியல், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி, உணவு அல்லது விலங்கு ஊட்டச்சத்து, இணை ஊட்டச்சத்து நிபுணர்கள் (ANutr) மற்றும் ஊட்டச்சத்து சங்கத்தின் ஆய்வாளர்கள் ஆவர்.

இணை ஊட்டச்சத்து நிபுணர்கள்[தொகு]

இணை ஊட்டச்சத்து நிபுணர்கள் என்போர் ஊட்டச்சத்து அறிவியலில் நல்ல அடிப்படை அறிவைப் பெற்றுள்ள பட்டதாரிகள் ஆவர். இவர்கள் பதிவு செய்யப்பட்ட ஊட்டச்சத்து வல்லுநர் ஆவதற்காக ஊட்டச்சத்தின் ஒரு சிறப்புப் பிரிவில் போதுமான அனுபவம் பெறுவதற்கான பணியினை மேற்கொண்டிருப்பர்.[7]

பதிவுசெய்யப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்கள்[தொகு]

பதிவுசெய்யப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்கள், பயன்பாட்டு அறிவு, புாிந்து கொள்ளுதல் மற்றும் அனுபவ அறிவு ஆகிய திறனுடையவர்கள் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். மேலும் இவர்கள் தங்களது அறிவை இற்றைப் படுத்திக்கொள்வதோடு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட முறைப் பின்பற்றவும் செய்வர்.[8]

ஊட்டச்சத்து சங்கத்தின் உறுப்பினர்கள்[தொகு]

இவர்கள், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு பதிவுசெய்யப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்கள், ஊட்டச்சத்து நடைமுறை, ஆராய்ச்சி அல்லது கல்வி ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீடித்த பங்களிப்பை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பெற்றிருப்பதன் மூலம் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Association for Nutrition :: AfN Home". Association for Nutrition. பார்த்த நாள் 30 June 2017.
  2. "Public Health England - How to become a nutritionist" Accessed 15 January 2015.
  3. "NHS Careers - Explore a career: Nutritionist" Accessed 15 January 2015.
  4. "NHS Choices - Find a Registered Nutritionist or Dietitian" Accessed 15 January 2015.
  5. "National Careers Service - Job Profile for Nutritionists" Accessed 15 January 2015.
  6. "The UK Voluntary Register of Nutritionists (UKVRN)" Accessed 15 January 2015.
  7. "Associate Nutritionist Description" Accessed 15 January 2015.
  8. "Registered Nutritionist Description" Accessed 15 January 2015.
  9. "Fellowship of the AfN Description" Accessed 15 January 2015.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்டச்சத்து_சங்கம்&oldid=2748781" இருந்து மீள்விக்கப்பட்டது