ஊடகவியலாளர்களின் உரிமைகள் எவை?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரிமைகள் மீறப்படுவதை இனம் காணும் உரிமை ஊடகவியலாளர்களுக்கு இருப்பது அவசியமாகும். ஊடகவியலாளர்களின் உரிமைகள் பற்றி நாம் கீழே எடுத்துரைக்கிறௌம். இந்த உரிமைகள் நேரடியாக அல்லது மறைமுகமாக பாதிப்புக்குள்ளாகலாம். மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சர்வதேச ஸ்தாபனம் 1940 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதியன்று ஜெனிவா சாசனத்தில் மேலதிகமாக இராஜதந்திர பின்னிணைப்பு இது சர்வதேச ஆயூத மோதல்களினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் விதிமுறைகளைக் கொண்டிருக்கிறது.


• சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் அத்தியாயம் 9: “எவர் ஒருவரையூம் நியாயமற்ற விதத்தில் கைது செய்யவோ தடுத்து வைக்கவோ நாடு கடத்தவோ முடியாது”


பொது மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அத்தியாயம் 9 (1) : “அனைவரும் தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உரிமையை உடையவராகின்றார். எவரும் தன்னிச்சையான கைது மற்றும் தடுத்துவைத்தலுக்கு உட்பட முடியாது. சட்டத்தில் கூறப்பட்டவாறாக அல்லாது எவருடைய தனிநபர் சுதந்திரமும் பறிக்கப்படலாகாது”

ஊடகவியலாளர் ஓருவர் எவ்விதமான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைக்கும் உட்படாமலிருக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றார்.

• சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்இ அத்தியாயம் 5: “எவரும் சித்திரவதைக்குட்படுத்தப்படவோ அல்லது குரூரமான மனிதாபிமானமற்றஇ தரக்குறைவான வகையில் நடத்தப்படவோ கூடாது” ஊடகவியலாளர் ஒருவர் எந்தவொரு அரசாங்கம் அல்லது அரசியல் கட்சியினதும் அழுத்தத்திற்கும் ஆளாகாமல் சொந்தக் கருத்தைக் கொண்டிருக்கவூம்இ தாம் விரும்பிய ஊடகம் மூலமாக அவற்றை வெளியிடவூமான உரிமையைக் கொண்டிருக்கின்றார்.

• சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் அத்தியாயம் 19: “அனைவரும் தமது சொந்தக் கருத்தைக் கொண்டிருத்தல் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திர உரிமையைக் கொண்டிருக்கின்றனர். எவ்விதமான தடையூமின்றி தகவல்கள்இ கருத்துக்களை எந்த ஊடகத்தின் மூலமும் பெற்றுக்கொள்வதற்கான உரிமையை இது உள்ளடக்குகிறது.

பொது மற்றும் அரசியல் உரிமை தொடர்பான ஐ.நா. சாசனம்இ அத்தியாயம் 19 : (1) “ஒவ்வொருவரும் எந்த விதமான குறுக்கீடுகளும் அற்ற முறையில் தனது கொள்கையைப் பேணும் உரிமையை கொண்டிருக்கின்றார்”


(2) “அனைவரும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கொண்டிருக்கின்றனர். குறுக்கீடற்ற முறையில் நாட்டின் எல்லைகளைக் கடந்தும் தமக்குத் தேவையான தகவல்களை தேடுதல் பெறுதல் மற்றும் தாம் விரும்பும் ஊடகத்தினைப் பயன்படுத்தி வாய்மொழி மூலமாகவோ எழுத்து மூலமாவோ கலை வடிவங்களினூடாகவோ தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்இ வெளியிடல் என்பவற்றிற்கான உரிமையூம் இதிலடங்குகின்றது.

(3) இந்த அத்தியாயத்தின் 2ம் பந்தியில் குறிப்பிடப்பட்டப்பட்டுள்ள உரிமையைப் பாவிப்பதற்கு சில குறப்பிட்ட கடமைகளும்இ பொறுப்புக்களும் கடைப்பிடிக்கப்படவேண்டும். அதனால் இந்த உரிமை சில கட்டுப்பாடுகளிற்கு உட்படலாம் என்றாலும்இ அது சட்டத்திற்குட்பட்டதாகவோ அல்லது பின்வரும் காரணங்களுக்கானதாகவோ இருக்க முடியூம்:

1. மற்றவர்களின் உரிமை மற்றும் கௌரவத்தை மதித்தல்

2. தேசிய பாதுகாப்பு அல்லது பொதுமக்கள் சட்டம் (பொதுக்கட்டுப்பாடு) அல்லது பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் உளப்பாங்கு என்பவற்றைப் பாதுகாத்தல். தடையேதுமின்றி சங்கங்கள்இ அமைப்புக்களை உருவாக்குதல் மற்றும் அமைதியாக ஒன்றுகூடல் என்பவற்றுக்கான உரிமைகளை ஊடகவியலாளர்கள் கொண்டுள்ளனர்.

• சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் அத்தியாயம் 20 (1): “ஒவ்வொருவரும் அமைதியான முறையில் ஒன்று கூட மற்றும் சங்கம் அமைக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர்”

• சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் அத்தியாயம் 23 (4): “ஒவ்வொருவரும் தொழிற்சங்கம் அமைக்கும் மற்றும் தனது நலன் கருதி தொழிற்சங்கத்தில் சேரும் உரிமையைக் கொண்டுள்ளனர்.”

• பொது மற்றும் அரசியல் உரிமை தொடர்பான ஐ.நா. சாசனம்இ அத்தியாயம் 21 : “அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமை அங்கீகரிக்கப் பட்டுள்ளது. சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட மற்றும் ஜனநாயகம் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக அமுல்ப்படுத்தப்படும் சட்டங்களான தேசிய பாதுகாப்பு அல்லது பொதுமக்கள் சட்டம் (பொதுக்கட்டுப் பாடு) அல்லது பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் உளப்பாங்கு என்பவற்றைப் பாதுகாத்தல் மற்றும் ஏனையோரின் உரிமைக்கு மதிப்பளித்தல் போன்ற விடயங்கள் தவிர்;ந்த இந்த உரிமைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாகாது.

• பொது மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஐ.நா. சாசனம்: அத்தியாயம் 22: (1) “ஒவ்வொருவரும் தனது நலன் கருதி மற்றவர்களுடன் கூட்டுறவூ வைக்கும் தொழிற்சங்கங்களை அமைக்கும்இ அவற்றில் அங்கத்தவராகும் உரிமையைக் கொண்டுள்ளனர்.”

(2) “சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட மற்றும் ஜனநாயகம் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக அமுல்ப்படுத்தப்படும் சட்டங்களான தேசிய பாதுகாப்பு அல்லது பொதுமக்கள் சட்டம் (பொதுக்கட்டுப்பாடு) அல்லது பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் உளப்பாங்கு என்பவற்றைப் பாதுகாத்தல் மற்றும் ஏனையோரின் உரிமைக்கு மதிப்பளித்தல் போன்ற விடயங்கள் தவிர்ந்த இந்த உரிமைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாகாது. இந்த அத்தியாயமானதுஇ ஆயூதப்படையினர் மற்றும் பொலிஸார் சட்டப்படி தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்டுப்பாடு விதிக்காது.” ஆபத்தான பகுதிகளில் கடமையில் ஈடுபட்டிருக்கும் ஒரு ஊடகவியலாளர் மோதலில் ஈடுபடும் ஒருவராகவன்றி ஒரு பொதுமகனாகக் கருதப்படவேண்டும்

• ஜெனீவா உடன்படிக்கையில் 1940ம் ஆண்டு ஓகஸ்ட் 12இல் சேர்க்கப்பட்ட சர்வதேச ஆயூதப் போராட்டங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புப் பற்றிய அறிக்கை அத்தியாயம் 79 – ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறைகள்:

(1) “அத்தியாயம் 50 பந்தி 1ன் பிரகாரம் ஆபத்தான பகுதியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் ஒரு ஊடகவியலாளர் மோதலில் ஈடுபடும் ஒருவராகயின்றி பொதுமகனாகக் கருதப்படவேண்டும்”

(2) “;ஊடகவியலாளர் தான் ஓரு பொதுமகன் என்ற நிலையிலிருந்து பிறழாமலும்இ போர்க்காலத்தில் ஆயூதப்படையினரின் தொடர்பாடல் முறைகள் பற்றி மூன்றாம் உடன்படிக்கையின் அத்தியாயம் 4 அ வில் குறிப்பிடப்பட்ட நிலைக்குப் பங்கம் விளைவிக்காமலும் நடந்து கொள்ளுமிடத்து இந்த உடன்படிக்கையின் பிரகாரம் பாதுகாக்கப்படும் உரிமையைப் பெறுகின்றார்.

(3) “இந்த உடன்படிக்கையின் பின்னிணைப்பு 2இல் தரப்பட்ட மாதிரியை ஒத்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஊடகவியலாளர் பிரஜாவூரிமை பெற்றிருக்கும் நாட்டின் மாநிலத்தினால் அல்லது அவர் குடியிருக்கும் அல்லது வேலைபார்க்கும் அல்லது அவரை வேலைக்கமர்த்தியிருக்கும் ஊடகத்தின் அலுவலகம் அமைந்திருக்கும் மாநில அரசினால் இந்த அடையாள அட்டையானது அவரது ஊடகவியலாளர் அந்தஸ்தை உறுதி செய்து வழங்கப்படவேண்டும்.”