ஊசிவால் குளவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊசிவால் குளவி
Diphyus sp., ரோன் (பிரான்சு)
Cremastinae, (தன்சானியா)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Hymenoptera
துணைவரிசை: Apocrita
பெருங்குடும்பம்: Ichneumonoidea
குடும்பம்: Ichneumonidae
Latreille, 1802
Subfamilies

see below

ஊசிவால் குளவி (Ichneumonidae) என்பது குளவி குடும்பத்தின் வரிசையைச் சேர்ந்த ஒரு ஒட்டுண்ணி பூச்சி ஆகும். இவை முதுகெலும்பு இல்லாத பூச்சி இனமாகும்.

பரவல்[தொகு]

ஊசிவால் குளவிகள் அண்டார்டிகா தவிர பிற அனைத்துக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. இவை புவியின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் வசிக்க, ஏதுவாக இடங்கள் உள்ளன.

இவை உயர் வெப்ப மண்டலப் பகுதிகளில் அரியதாக உள்ளன என நம்பப்படுகிறது, மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதியில் பெருமளவில் இந்த இனப் பூச்சிகள் காணப்படுகின்றன. இந்தக் குடும்பம் "அசாதாரணமான" நில பன்முகத்தன்மைக்கு விதிவிலக்காக பாடநூல்களில் உதாரணமாக சுட்டப்படுகின்றன. அண்மையில் இந்த நம்பிக்கைகுறித்து பல புதிய வெப்பமண்டல இனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.[1][2][3]

தோற்றம்[தொகு]

இவை ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட மெல்லிய இறக்கைகளும் அதில் நரம்புகள் போன்ற கோடுகளும் உடையவை. இவற்றின் தலையில் இரு பெரிய கூட்டுக்கண்கள் இருக்கும். தலையில் இரு உணர் கொம்புகள் கொண்டிருக்கும். மார்பையும் தலையையும் காம்பு போன்ற மெல்லிய கழுத்து இணைக்கும். மார்புப் பகுதியில் ஆறு கால்கள் இருக்கும். மார்புப் பகுதியை அடுத்து நீள் உருளை வடிவில் ஆறு கண்டங்களைக் கொண்ட வயிற்றுப்பகுதி இருக்கும். இந்தக் குளவியின் தனிச்சிறப்பு, இதன் வயிற்றுப் பகுதியின் கடைசிக் கண்டத்தில் இருந்து நீண்ட ஊசி போன்ற முட்டையிடும் நீட்சி இருக்கும்.

முட்டையிடல்[தொகு]

சில ஊசிவால் குளவிகள் தங்கள் முட்டைகளைத் தரையில் இடுகின்றன ஆனால் பெரும்பாலான ஊசிவால் குளவிகள் மட்கிப்போன மரங்களின் மேற்பரப்பில் பறந்து மரத்தின் உள்ளே இருக்கும் பூச்சிகளின் குடம்பி (லார்வா) புழுக்கள் இருப்பதை அறிந்து அவற்றின் உடலிலோ, அவற்றைன் அருகிலோ தமது நீண்ட ஊசிபோன்ற நீட்சியின் உதவியால் முட்டையிடும். ஊசிவால் குளவியின் முட்டை பொரிந்து அந்தப் புழு இளம்பருவ பூச்சியினை (அவை உயிருடன் இருக்கும் போதே) கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிக்கும். ஊசிவால் குளவி கூட்டுப்புழு பருவம் அடையும் நிலையில் தான் சாப்பிட்டு வந்த குடம்பி உயிரிழக்கும். இவை இவ்வாறு தன் இனத்தை வளர்க்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sime, K. R.; Brower, A. V. Z. (1998). "Explaining the latitudinal gradient anomaly in ichneumonid species richness: Evidence from butterflies". Journal of Animal Ecology 67 (3): 387. doi:10.1046/j.1365-2656.1998.00198.x. https://archive.org/details/sim_journal-of-animal-ecology_1998-05_67_3/page/387. 
  2. Veijalainen, A.; Wahlberg, N.; Broad, G. R.; Erwin, T. L.; Longino, J. T.; Saaksjarvi, I. E. (2012). "Unprecedented ichneumonid parasitoid wasp diversity in tropical forests". Proceedings of the Royal Society B: Biological Sciences 279 (1748): 4694. doi:10.1098/rspb.2012.1664. 
  3. Quicke, D. L. J. (2012). "We Know Too Little about Parasitoid Wasp Distributions to Draw Any Conclusions about Latitudinal Trends in Species Richness, Body Size and Biology". PLoS ONE 7 (2): e32101. doi:10.1371/journal.pone.0032101. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசிவால்_குளவி&oldid=3736064" இலிருந்து மீள்விக்கப்பட்டது