ஊசிப்புழு நோய்த் தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊசிப்புழுத் தொற்று
ஒத்தசொற்கள் Enterobiasis, oxyuriasis[1]
Enterobius vermicularis.png
ஊசிப்புழுவின் முட்டைகள் (Enterobius vermicularis)
சிறப்பு தொற்றுநோய்
அறிகுறிகள் மலங்கழிவாயில் அரிப்புணர்வு[1]
வழமையான தொடக்கம் 4 முதல் 8 கிழமைகள் வரையிலான தொடர்பு[2]
காரணங்கள் ஊசிப்புழு (Enterobius vermicularis)[3]
சூழிடர் காரணிகள் பள்ளிக்கூடம் செல்லுதல்[1]
நோயறிதல் புழுக்களையோ முட்டைகளையோ பார்த்தல்[1]
தடுப்பு கைகழுவுதல், ஒவ்வொரு நாளும் காலையில் குளித்தல், நாள்தோறு உள்ளாடை மாற்றல்[1]
மருந்து Mebendazole, pyrantel pamoate, or albendazole[4]
முன்கணிப்பு மிகவும் கடியதன்று [5]
Frequency பரவலாகக் காணக்கூடியது [1][5]

ஊசிப்புழு (Pinworm infection இது நூல்புழு நோய்த் தொற்று எனவும் அழைக்கப்படுகிறது) என்பது ஊசிப்புழுவினால் மனிதர்களுக்கு ஏற்படும் ஒட்டுண்ணி பீடிப்பு நோயாகும்.[3] மலவாயில் அரிப்புத் தோலழற்சி ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும்.[1] இந்த நோய்த் தொற்று வந்தால் தூக்கமின்மை ஏற்படும்.[1] ஆனால் ஒரு சிலருக்கு இதன் அறிகுறிகள் தெரிவது இல்லை.[1]

இந்த நோயானது ஊசிப்புழுவின் முட்டைகளின் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது.[6] இந்த முட்டைகள் துவக்கத்தில் மலவாய் அருகே தோன்றி சுமார் மூன்று வாரங்கள் வரை அங்கு உயிர்வாழ்கின்றன. பள்ளிக்கூடம் செல்பவர்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் பணிபுரிபவர்கள் அல்லது நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பவர்கள் போன்றோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது.[6] ஆனால் மற்ற விலங்குகள் மூலமாக இந்த நோய்கள் பரவாது.[6] புழுவானது ஒரு செண்ட்டி மீட்டர் நீளத்திற்கு வந்த பிறகோ அல்லது நுண்நோக்கி மூலமாகவோ இதனைக் கண்டறியலாம்.[7][8]

பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தன்மைக்குப் பொருத்தவாறு மெபண்டசோல், பைடண்டல் பைமோட் அல்லது அல்பண்டசோல் ஆகிய மருந்துகளை இரண்டு பொழுதளவு இரண்டு வாரங்களுக்கு மருந்து கொடுக்கப்படலாம்.[4] பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுபவர்களும் இதே அளவிலான மருந்துகளை எடுத்துக் கொள்ளல் வேண்டும்.[9] சொந்த உடைமைகளை வெந்நீரில் வைத்து துவைக்க வேண்டும்.[9] நன்றாக கைகழுவுதல், நாள்தோறும் காலையில் குளித்தல், உள்ளாடைகளை தினமும் மாற்றுதல் ஆகியவை இந்த நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவும்.[9]

ஊசிப்புழு நோய்த்தொற்று உலகின் பல்வேறு நாடுகளிலும் காணப்படுகிறது.[10][5] பொதுவாக இவ்வகையான நோய்த் தொற்று வளர்ந்த நாடுகளில் காணப்படுகிறது.[10] அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 20 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.[11] இது தீவிர நோய்த் தொற்றாகக் கருதப்படவில்லை.[5] இந்த நோய்த் தொற்று வரலாற்றின் பல காலங்களில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது.[12]

வரலாறு[தொகு]

வெள்ளைப்பூண்டு இந்த நோய்த் தொற்றுக்கு மருந்தாக இந்தியா, சீனா, எகிப்து மற்றும் கிரேக்கம் (நாடு) போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.[13] இப்போக்கிரட்டீசு (459–370 கி.மு) நோயின் ஒட்டுண்ணிகளுக்கு மருந்தாக பூண்டினைக் குறிப்பிட்டுள்ளார்.[14] ஜெர்மனி தாவரவியலாளர் லானிசரஸ் (1564) நோய்த் தொற்றிற்கு பூண்டினை மருந்தாக குறிப்பிட்டுள்ளார்.[15] ஆனால் வெறும் வெள்ளைப் பூண்டினை தோலில் பயன்படுத்தினால் சருமப் பாதிப்புகள் ஏற்படும்.[16][17]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Pinworm Infection FAQs" (10 January 2013). மூல முகவரியிலிருந்து 15 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 October 2016.
 2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CDC2015Epi என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. 3.0 3.1 Stermer, E; Sukhotnic, I; Shaoul, R (May 2009). "Pruritus ani: an approach to an itching condition". Journal of Pediatric Gastroenterology and Nutrition 48 (5): 513–6. doi:10.1097/mpg.0b013e31818080c0. பப்மெட் 19412003. 
 4. 4.0 4.1 "Treatment" (23 September 2016). மூல முகவரியிலிருந்து 18 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 October 2016.
 5. 5.0 5.1 5.2 5.3 Griffiths, Christopher; Barker, Jonathan; Bleiker, Tanya; Chalmers, Robert; Creamer, Daniel (2016) (in en). Rook's Textbook of Dermatology, 4 Volume Set (9 ). John Wiley & Sons. பக். 33.13. ISBN 9781118441176. Archived from the original on 5 November 2017. https://web.archive.org/web/20171105195020/https://books.google.com/books?id=EyypCwAAQBAJ&pg=SA33-PA13. 
 6. 6.0 6.1 6.2 "Pinworm Infection FAQs" (10 January 2013). மூல முகவரியிலிருந்து 15 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 October 2016.
 7. "Pinworm Infection FAQs" (10 January 2013). மூல முகவரியிலிருந்து 15 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 October 2016.
 8. "Pinworm Infection FAQs" (10 January 2013). மூல முகவரியிலிருந்து 15 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 October 2016.
 9. 9.0 9.1 9.2 "Pinworm Infection FAQs" (10 January 2013). மூல முகவரியிலிருந்து 15 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 October 2016.
 10. 10.0 10.1 "Pinworm Infection FAQs" (10 January 2013). மூல முகவரியிலிருந்து 15 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 October 2016.
 11. Stermer, E; Sukhotnic, I; Shaoul, R (May 2009). "Pruritus ani: an approach to an itching condition". Journal of Pediatric Gastroenterology and Nutrition 48 (5): 513–6. doi:10.1097/mpg.0b013e31818080c0. பப்மெட் 19412003. 
 12. Bynum, W. F.; Porter, Roy (2013) (in en). Companion Encyclopedia of the History of Medicine. Routledge. பக். 358. ISBN 9781136110368. Archived from the original on 5 November 2017. https://web.archive.org/web/20171105195020/https://books.google.com/books?id=gyidO-ZLdiYC&pg=PA358. 
 13. "Extracts from the history and medical properties of garlic". Pharmacognosy Reviews 4 (7): 106–10. 2010. doi:10.4103/0973-7847.65321. பப்மெட் 22228949. 
 14. Tucakov J. Beograd: Naucna knjiga; 1948. Farmakognozija; pp. 278–80.
 15. 3. Tucakov J. Beograd: Kultura; 1971. Lecenje biljem - fitoterapija; pp. 180–90.
 16. Borrelli, F; Capasso, R; Izzo, AA (November 2007). "Garlic (Allium sativum L.): adverse effects and drug interactions in humans". Molecular Nutrition & Food Research 51 (11): 1386–97. doi:10.1002/mnfr.200700072. பப்மெட் 17918162. 
 17. Friedman, T; Shalom, A; Westreich, M (October 2006). "Self-inflicted garlic burns: our experience and literature review". International Journal of Dermatology 45 (10): 1161–3. doi:10.1111/j.1365-4632.2006.02860.x. பப்மெட் 17040429. 

வெளியிணைப்புகள்[தொகு]

Brown MD (March 2006). "Images in clinical medicine. Enterobius vermicularis". The New England Journal of Medicine 354 (13): e12. doi:10.1056/NEJMicm040931. பப்மெட் 16571876.