உள்ளடக்கத்துக்குச் செல்

ஊசித்தட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Damselfly
புதைப்படிவ காலம்:271–0 Ma
A female bluetail damselfly
(Ischnura heterosticta)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
உயிரிக்கிளை:
கணுக்காலி
வகுப்பு:
பூச்சி
வரிசை:
ஓடோனாட்டா
Suborder:
சிகோப்டெரா

Selys, 1854[1]
Families
$ indicates paraphyletic groups

ஊசித்தட்டான் அல்லது ஊசித்தட்டாரப் பூச்சி அல்லது ஊசித் தும்பி (Damselfly) என்பது நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் பூச்சிக் குடும்பமாகும். தட்டாரப்பூச்சியைவிட ஒல்லியான, ஊசி போன்ற பறக்கும் பூச்சித் தனியன்களாகும்.

இப்பூச்சிகள் உயிரினப் வகைப்பாட்டில் “பல் இருக்கின்ற” எனப் பொருள்படும் ஓடோனட்டா என்னும் வரிசையில், சைகோப்டெரா என்னும் துணைவரிசையைச் சேர்ந்த உயிரினமாகும். இவை தட்டாரப்பூச்சி போலல்லாது ஓய்வெடுக்கும்போது இறக்கைகளை நீளவாட்டில் சமாந்தரமாக வைத்துக் கொள்ளும்.

ஊசித்தட்டானின் பின் இறக்கைகள் முன் இறக்கைகளை ஒத்து காணப்படும். ஒப்பீட்டளவில் தட்டாரப்பூச்சிளைவிட சிறிதும் பலவீனமான இவற்றின் கண்கள் வேறுபட்டுக் காணப்படும்.

சொல்லிலக்கணம்

[தொகு]

சைகோப்டெரா (Zygoptera) எனும் பெயர் கிரேக்க மொழியில் ஒன்றிணைந்த அல்லது சேர்ந்திருக்கும் எனும் பொருளுள்ள சைகோ மற்றும் இறக்கைகள் எனும் பொருளுள்ள பிடெராசு ஆகிய சொற்களிலிருந்து உருவாகியது. "சைகோ" + "பிடெராசு" என்ற இருசொற்களின் கூட்டு. சைகோப்டெரா என்பது "சேர்ந்திருக்கும் இறகுகள்" எனப் பொருள் கொள்கிறது.[2] ஊசித்தட்டான் இரு சோடி இறக்கைகள் கொண்டு காணப்படும். அவை தட்டாரப்பூச்சியின் இறக்கைள் போன்று பின் இறக்கைகள் முன் இறக்கைகளைவிட அகலமானவையல்ல. ஊசித்தட்டான் தன் இறக்கைகளை பின் நோக்கி மடிக்க வல்லன, ஆனால் தட்டாரப்பூச்சியால் அவ்வாறு செய்ய முடியாது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Selys-Longchamps, E. (1854). Monographie des caloptérygines (in French). Brussels and Leipzig: C. Muquardt. pp. 1-291 [2]. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5962/bhl.title.60461.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Damselflies". பார்க்கப்பட்ட நாள் 7 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசித்தட்டான்&oldid=3739382" இலிருந்து மீள்விக்கப்பட்டது