உஸ்மான் கனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உஸ்மான் கனி ( பஷ்தூ: غني عثمان  ; பிறப்பு 20 நவம்பர் 1996) ஒரு ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.[1] இவர் ஒரு வலது கை தொடக்க மட்டையாளர் ஆவார். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்ட ம், முதல் தரத் துடுப்பாட்ட ம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

இவர் மே 1, 2014 அன்று கோலாலம்பூரின் பேயுமாஸ் ஓவலில் ஹாங்காங் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 2014 ஆசிய துடுப்பாட்ட கவுன்சில் பிரீமியர் லீக்கில் அறிமுகமானார், அதில் இவர் 27 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினை எடுத்தார். பின் மட்டையாட்டத்தில் 68 ஓட்டங்களை எடுத்தார். இதில் 6 நான்கு ஓட்டங்களும் 4 ஆறுகளும் அடங்கும். அதற்கு அடுத்த ஒருநாள் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக 55 ஓட்டங்கள் எடுத்தார். 45.60 எனும் சராசரியோடு 228 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.[2]

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில், இவர் ஆறு நான்குகள் மற்றும் மூன்று ஆறுகளுடன் 79 ஓட்டங்கள் எடுத்தார் மற்றும் புலாவாயோ தடகள சங்கத்தில் நடந்த சுற்றுப்பயண போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வென்றது.[3]

இரண்டாவது ஒருநாள் போட்டியில், குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பாக ஜிம்பாப்வேக்கு எதிரான ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக இவர் விளையாடினார். இந்தத் தொடரின் ஒரு ஆட்டப் பகுதியில் 143 பந்துகளில் 118 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த ஆப்கான் மட்டையாளர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்தார்.

இவர் அக்டோபர் 26, 2015 அன்று ஜிம்பாப்வேக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[4]

இவர் நவம்பர் 19, 2017 அன்று 2017–18 அஹ்மத் ஷா அப்தாலி 4 நாள் போட்டியில் பேண்ட்-இ-அமீர் பிராந்தியத்திற்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[5]

ஜூலை 2018 இல், 2018 காசி அமானுல்லா கான் பிராந்திய ஒருநாள் போட்டியில் பேண்ட்-இ-அமீர் பிராந்திய துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். அந்தத் தொடரில் ஐந்து போட்டிகளில் 218 ஓட்டங்கள் டுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த மட்டையாளர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்தார்.[6]

2014 ஆம் ஆண்டில் ஆசிய துடுப்பாட்ட அவை கோப்பை போட்டித் தொடரில் இவர் விளையாடினார். மே 1, கோலாலம்பூர் துடுப்பாட்ட மைதானத்தில் ஆங்காங் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 21 ஒட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 68 பந்துகளில் 70 ஓட்டங்களை எடுத்து நிசாத் கான் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி 6 இலக்குகளில் வெற்றி பெற்றது.[7]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உஸ்மான்_கனி&oldid=2868088" இருந்து மீள்விக்கப்பட்டது