உஸ்தா முகமது மாவட்டம்
உஸ்தா முகமது استا محمد | |
|---|---|
மாவட்டம் | |
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உஸ்தா முகமது மாவட்டத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 28°10′42″N 68°2′35″E / 28.17833°N 68.04306°E | |
| மாகாணம் | பலூசிஸ்தான் |
| கோட்டம் | நசீராபாத் |
| நிறுவிய ஆண்டு | 01 செப்டம்பர் 2022 |
| தலைமையிடம் | உஸ்தா முகமது |
| அரசு | |
| • வகை | மாவட்ட நிர்வாகி (துணை ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 953 km2 (368 sq mi) |
| மக்கள்தொகை (2023) | |
| • மொத்தம் | 2,92,060 |
| • அடர்த்தி | 310/km2 (790/sq mi) |
| எழுத்தறிவு | |
| • சராசரி எழுத்தறிவு |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேஎரம்) |
| மாகாணச் சட்டமன்றத் தொகுதி எண் | PB 14 |
| இணையதளம் | Official site |
உஸ்தா முகமது (Usta Muhammad District), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான்மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் உஸ்தா முகமது நகரம் ஆகும். உஸ்தாத் முகமது நகரம், மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு தென்கிழக்கே 245 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 782 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ஜாப்ராபாத் மாவட்டத்தின் இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் செப்டம்பர் 2022ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3]
மாவட்ட எல்லைகள்
[தொகு]
உஸ்தா முகமது மாவட்டத்திற்கு வடக்கில் ஜாப்ராபாத் மாவட்டம், கிழக்கில் சிந்து மாகாணம், தெற்கிலும், தென்மேற்கிலும் ஜால் மாக்சி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]உஸ்தா முகமது மாவட்டம் 2 வருவாய் வட்டங்களையும், 20 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.
| வருவாய் வட்டம் | Area
(km²)[4] |
மக்கள்தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[5] |
ஒன்றியக் குழுக்கள் | மாநகராட்சி |
|---|---|---|---|---|---|---|
| உஸ்தா முகமது வட்டம் | 399 | 210,870 | 528.50 | 38.17% | 11 | மாநகராட்சி |
| காந்தாக வட்டம் | 554 | 81,190 | 146.55 | 24.59% | 09
|
TC |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உஸ்தா முகமது மாவட்டத்தின் மக்கள் தொகை 2,92,060 ஆகும்.[6].
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் பலூச்சி மொழியை 40.18%, சிந்தி மொழியை 24.71%, சராய்கி மொழியை 19.05%,பிராகுயி மொழியை 19.05% பேரும் பேசுகின்றனர்.
சமயங்கள்
[தொகு]இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 97.30% பேரும், இந்து & கிறித்தவ போன்ற சமயங்களை 2.70% பேரும் பின்பற்றுகின்றனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "Balochistan's new districts to bring prosperity: Farah". The Nation newspaper. 10 June 2022. https://www.nation.com.pk/10-Jun-2022/balochistan-s-new-districts-to-bring-prosperity-farah.
- ↑ "Tehsils & Unions in the District of Jaffarabad (new Usta Muhammad District created from old Jaffarabad District in 2022)". National Reconstruction Bureau, Government of Pakistan website. Archived from the original on 26 மார்ச் 2012. Retrieved 30 January 2024.
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).