உஷா விசயராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஷா விசயராகவன்
பிறப்பு1961
தேசியம்இந்தியர்
பணியிடங்கள்இந்திய அறிவியல் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்தில்லி பல்கலைக்கழகம், முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகர்
அறியப்படுவதுமூலக்கூறு மரபியல். தாவர வளர்ச்சி
துணைவர்கே. விஜயராகவன்

உஷா விசயராகவன் (Usha Vijayaraghavan) என்பவர் (பிறப்பு. 1961) பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் நுண்ணுயிரியல் மற்றும் உயிரணு உயிரியல் துறையின் பேராசிரியராக உள்ளார். இவரது முக்கிய ஆராய்ச்சியாக மூலக்கூறு மரபியல், தாவர வளர்ச்சி உள்ளது.[1][2]

இவர் அறிவியலில் பெண்களில் எனும் பெருமையினைப் பெற்றுள்ளார்.[3]

கல்வி[தொகு]

உஷா விஜயராகவன் தில்லி பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியலும் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் காடிகளின் மூலக்கூறு மரபியலில் பேராசிரியர் ஜே ஆபெல்சன் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார்.[1] இதன் பின்னர், தாவர மரபியலில் பேராசிரியர் ஈ. மேயாரோவிட்சுடன் முனைவர் பட்ட மேலாராய்ச்சினை தொடர்ந்தார். இதில் பூக்கள் பூத்தலின் செயலினை ஒழுங்குபடுத்தும் மரபணுக்கள் பற்றிய தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். கலிபோர்னியாவிலிருந்து இந்தியா திரும்பியதும், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆசிரியப் பதவியை (1990) ஏற்றுக்கொண்டார், இங்கு இவர் நுண்ணுயிரியல் மற்றும் உயிரணு உயிரியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இந்திய அறிவியல் நிறுவனத்தில் இவரது ஆராய்ச்சிக் குழுவினர், காடிகள் மற்றும் தாவரங்களில் மரபணு செயல்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதற்கான பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள மூலக்கூறு மரபியல் மற்றும் செயல்பாட்டு மரபியல் குறித்து ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.[4]

தொழில்[தொகு]

விஜயராகவன் 1990-ல் பெங்களூரில் உள்ள இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் ஆசிரியப் பதவியைப் பெற்றார், தற்போது அவர் நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் துறையில் பேராசிரியராக உள்ளார். இந்திய அறிவியல் கழகத்தில் உள்ள இவரது ஆராய்ச்சிக் குழு, காடிகள் மற்றும் தாவரங்களில் மரபணு செயல்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதற்கான பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள மூலக்கூறு மரபியல் மற்றும் செயல்பாட்டு மரபியல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்ததிலிருந்து, விஜயராகவனின் ஆராய்ச்சி நோக்கங்களில் ஒன்று பூக்கும் மற்றும் தாவர உருவ அமைப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களைத் தெரிந்துகொள்வதாகும்.[1]

ஆராய்ச்சி[5][6][தொகு]

நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் துறை, பேராசிரியர் விஜயராகவனின் வழிகாட்டுதலின் கீழ், மூலக்கூறு மரபியல் மற்றும் செயல்பாட்டு மரபியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி புரத உற்பத்தி மற்றும் மொழியாக்க பிந்தைய நிலைகளில் முழுக்கருவுள்ள உயிரிகளில் மரபணு ஒழுங்குமுறையைப் புரிந்துகொள்வதில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரணுப் பிரிவு மற்றும் வேறுபாட்டின் மீதான இத்தகைய ஒழுங்குபடுத்தப்பட்ட மரபணு வெளிப்பாட்டின் விளைவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. குறிப்பாக, தூதுவர் எம். ஆர்.என். ஏ. பிளவு காரணிகளின் மூலக்கூறு மரபணு ஆய்வுகள், எதிர்வினைகள் மற்றும் மரபணு வெளிப்பாட்டில் முன்-எம்ஆர்என்ஏ பிளவுபடுத்தலின் தாக்கத்தை ஆய்வு செய்கின்றனர்.

இவரது ஆராய்ச்சி சுட்டு எண் 32.40 மற்றும் எச் சுட்டுஎண் 18 (சுய மேற்கோள்களைத் தவிர்த்து) பெற்றுள்ளார்.[7] இவர் 2008 முதல் இந்திய அறிவியல் கழகத்தின் சகாவாக உள்ளார் (FNA-ID: P08-1472).[4]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

விஜயராகவன் தனது பணிக்காக விருதுகள் பெற்றுள்ளார்.

  • இந்திய உயிர் தொழில்நுட்பவியல்-உயிர் அறிவியல் விருது
  • வெல்கம் நிறுவன பன்னாட்டு மூத்த ஆராய்ச்சியாளர் நிதியுதவி ஐக்கிய ராச்சியம்
  • ஜே. சி.போஸ் ஆய்வு நிதியுதவி
  • 2007-ல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஆய்வு நிதி
  • புது தில்லி, இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் ஆய்வு நிதி
  • அலகாபாத், தேசிய அறிவியல் அகதமியின் ஆய்வு நிதி
  • உயிர் தொழில்நுட்பவியல் துறையின் தொழில் வளர்ச்சிக்கான தேசிய உயிரியல் விருது
  • சர். சி. வி. இராமன் விருது
  • ராக்பெல்லர் அறக்கட்டளை உயிர் தொழில்நுட்பவியல் பணி ஆய்வு நிதி[8]

உஷா உயிர் அறிவியல் ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். இவர் மரபியல் (ஜெனடிக்ஸ்) ஆய்விதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "INSA Profile - Usha Vijayaraghavan". பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.
  2. "Women in Science - Initiatives - Indian Academy of Sciences" (PDF). www.ias.ac.in.
  3. "My journey into understanding how cells and organisms are made" (PDF). www.ias.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
  4. 4.0 4.1 "INSA :: Indian Fellow Detail". insaindia.res.in. Archived from the original on 2019-12-05. பார்க்கப்பட்ட நாள் 2023-02-28.
  5. "MCB". mcbl.iisc.ac.in. Archived from the original on 2020-07-24. பார்க்கப்பட்ட நாள் 2023-02-28.
  6. "Usha VijayRaghavan". www.nasonline.org.
  7. "Bio". www.researchgate.net. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
  8. "Awards - MCB". பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_விசயராகவன்&oldid=3706159" இலிருந்து மீள்விக்கப்பட்டது