உஷா இராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஷா இராமநாதன்
உஷா இராமநாதன்
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம், நாக்பூர் பல்கலைக்கழகம் & தில்லி பல்கலைக்கழகம்
வாழ்க்கைத்
துணை
எசு. முரளிதர்

உஷா இராமநாதன் (Usha Ramanathan) என்பவர் இந்திய மனித உரிமை ஆர்வலர் ஆவார்.[1][2] இவர் சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு ஆய்விதழின் தெற்காசியா ஆசிரியர் ஆவார்.

பின்னணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இராமநாதன் தென்னிந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி ஆவார். சென்னைப் பல்கலைக்கழகம், நாக்பூர் பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சட்டம் பயின்றார்.[1] இவர் தற்போது ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி எசு. முரளிதரை மணந்தார்.

பணி[தொகு]

இராமநாதன், வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். இந்தியச் சட்ட நிறுவனத்தில் சுற்றுச்சூழல் சட்டம், தொழிலாளர் சட்டம் மற்றும் நுகர்வோர் சட்டத்தைக் கற்பிக்கும் பணியில் உள்ளார். உலகெங்கிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் உள்ளார். இவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் மனித உரிமைகள், இடப்பெயர்வு, கொடுமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை அடங்கும். இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஆய்வு முடிவுகளை விரிவாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக, போபால் நச்சு வாயுப் பேரழிவு, நர்மதா பள்ளத்தாக்கு அணைகள் மற்றும் தில்லியில் உள்ள குடிசைவாசிகளை வெளியேற்றுதல் போன்ற பல குறிப்பிட்ட பிரச்சனைகளில் இவர் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளார்.[3] இவர் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் ஆலோசகராக உள்ளார். எடுத்துக்காட்டாக, இவர் பன்னாட்டு மன்னிப்புச் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் மனநலம் குறித்த நிபுணராக உலக சுகாதார அமைப்பால் அழைக்கப்பட்டுள்ளார். இவரது கட்டுரைகளை பிரண்ட்லைன்,[4] தி இந்து,[5] தி வயர்[6] மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்[7] உள்ளிட்ட மற்ற முன்னணி செய்தித்தாள்களில் காணலாம்.

ஆதார் அடையாள அட்டைத் தொடர்பான பிரச்சனைகளை முன்னிலைப்படுத்த அயராத முயற்சிகளுக்காக 2018ஆம் ஆண்டுக்கான 'மனித உரிமைகள் கதாநாயகன்' விருதை அக்சஸ் நவ் அமைப்பு இவருக்கு வழங்கியது.[8][9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "fsi_guestFaculty". 2019-06-12. Archived from the original on 2019-06-12. பார்க்கப்பட்ட நாள் 2019-06-12.
  2. "Usha Ramanathan". The Indian Express (in Indian English). 2015-10-08. பார்க்கப்பட்ட நாள் 2019-06-12.
  3. "Short Profile - Dr. Usha Ramanathan". www.ielrc.org. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
  4. "Usha Ramanathan". Frontline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
  5. "Usha Ramanathan". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
  6. "The Wire: The Wire News India, Latest News,News from India, Politics, External Affairs, Science, Economics, Gender and Culture". m.thewire.in. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
  7. "Usha Ramanathan". The Indian Express (in ஆங்கிலம்). 2015-10-08. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
  8. "HUMAN RIGHTS HEROES & VILLAINS AWARDS". Access Now (in ஆங்கிலம்). Archived from the original on 2019-06-09. பார்க்கப்பட்ட நாள் 2019-06-12.
  9. "Access Now Calls Usha Ramanathan 'Human Rights Hero' for Opposition to Aadhaar". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2019-06-12.
  10. "Aadhaar Critic Usha Ramanathan Gets 'Human Rights Hero' Award". The Quint (in ஆங்கிலம்). 2019-06-10. பார்க்கப்பட்ட நாள் 2019-06-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_இராமநாதன்&oldid=3724352" இலிருந்து மீள்விக்கப்பட்டது