உள்ளடக்கத்துக்குச் செல்

உவைசு கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உவைசு கான்
மொகுலிசுதானின் கான்
முதல் ஆட்சி1418–1421
முன்னையவர்நக்‌ஷி ஜஹான்
பின்னையவர்ஷெர் முகம்மது
இரண்டாம் ஆட்சி1425–1429
முன்னையவர்ஷெர் முகம்மது
பின்னையவர்சதுக் கான்
இறப்பு1429
துணைவர்தவுலத் சுல்தான் சகஞ்ச்
குழந்தைகளின்
பெயர்கள்
யூனுஸ் கான்
இரண்டாம் எசன் புகா
மரபுபோர்சிசின்
தந்தைஷெர் அலி ஒகுலன்
தாய்சுல்தான் கதுன்
மதம்இசுலாம்

உவைசு கான் என்பவர் மொகுலிசுதானின் மொகுலாய கான் ஆவார். இவர் இரு முறை மொகுலிசுதானை ஆட்சி புரிந்தார். முதல் முறை 1418 முதல் 1421 வரையும், இரண்டாம் முறை 1425 முதல் 1429 வரையும் ஆட்சி புரிந்தார்.[1][2]  

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இவரது தந்தையின் இறப்பிற்குப் பிறகு, இவரது உறவினர் ஷெர் முகம்மதுவிடம் இவர் பணியாற்றினார். ஆனால் சிறிது காலத்திற்குள் தன் நிலை எரிச்சலூட்டுவதாக இருப்பதைக் கவனித்தார். எனவே அரசவையிலிருந்து  தப்பி ஓடினார். தன் வாழ்நாளைக் கொள்ளைக்காரனாகக் கழித்தார். பல குறிப்பிடத்தக்க மொகுலாய இளைஞர்கள் தாமாக முன்வந்து இவருடன் இணைந்தனர்.  

மொகுலாய-ஒயிரட்டு போர்கள்[தொகு]

உவைசு கான் தன்னை மதநம்பிக்கை உடையவராகக் காட்டிக் கொண்டார். எனினும் தன் இனத்தவர் நடுவில் தனது வீரத்திற்காக மதிக்கப்பட்டார். முகலாயர்கள் முசுலிம்களைத் தாக்கக் கூடாது எனத் தடை செய்திருந்தார். எனினும் காப்பிரிகள் என்று இவர் அழைத்த ஒயிரட்டுகளுக்கு எதிராகப் போர் நடத்தினார். ஒயிரட்டுகளால் இவர் அடிக்கடித் தோற்கடிக்கப்பட்டார். எனினும் அவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்ப்புக் காட்டி வந்தார். இவர் இரண்டு முறை ஒயிரட்டுகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிங்கு லக்கு யுத்தம்[தொகு]

ஒயிரட்டுகளுக்கு எதிராக இவர் முதலில் மிங்கு லக்கு என்ற இடத்தில் யுத்தம் புரிந்தார். அங்கு கைதியாகப் பிடிக்கப்பட்ட இவர் எசன் தைசிக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார். "உவைசு கான் உண்மையிலேயே செங்கிஸ் கானின் வழித்தோன்றலாக இருந்தால் அவர் என்னை வணங்க மாட்டார். மாறாக என்னைத் தாழ்ந்தவனாகக் கருதுவார்" என எசன் தைசி நினைத்தார். எனவே உவைசு கான் கொண்டு வரப்பட்டபோது எசன் தைசி தன் குதிரையிலிருந்து இறங்கி கானை நோக்கி மிகுந்த மரியாதையுடன் சென்றார். ஆனால் கான் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார். தன் எதிரியுடன் குலுக்குவதற்காகத் தன் கையைத் தூக்கவில்லை. எசன் தைசி உறுதிப்படுத்திக் கொண்டார். கானை மிகுந்த மரியாதையுடன் நடத்தினார். அவருக்கு விடுதலை கொடுத்தார். எசன் தைசியை ஏன் வணங்கவில்லை என் உவைசு கானிடம் கேட்கப்பட்ட போது, அவர் பின்வருமாறு கூறினார்:

பொதுவாகக் குறிப்பிடப்படும் தகவலானது இவர் ஒயிரட்டுகளுக்கு எதிராக 61 முறை சண்டையிட்டுள்ளார். ஒரே ஒரு முறை மட்டும் வெற்றி பெற்றுள்ளார். மற்ற அனைத்து முறையும் ஒயிரட்டுகளால் தோற்றோடச் செய்யப்பட்டுள்ளார்.[2]

உசாத்துணை[தொகு]

  1. Godrich & Fang 1976
  2. 2.0 2.1 2.2 The Tarikh-i-Rashidi: a history of the Moghuls of central Asia by Mirza Muhammad Haidar Dughlat; Editor: N. Elias,Translated by Sir Edward Denison Ross,Publisher:S. Low, Marston and co., 1895
"https://ta.wikipedia.org/w/index.php?title=உவைசு_கான்&oldid=3596545" இலிருந்து மீள்விக்கப்பட்டது