உவமப்போலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொல்காப்பியம் உவமம், உவமப்போலி என்பனவற்றைச் சுட்டுகிறது. முன்னதை நான்கு வகை என்கிறது. [1] பின்னதை ஐந்து வகை என்கிறது. [2] [3] இவற்றை இளம்பூரணர் என்னும் உரையாசிரியரின் வழி நிரல் செய்து விளங்கிக்கொள்ளலாம். உவமப்போலி என்பது உள்ளுறை உவமம் [4]

நிரல்[தொகு]

உவமம் உவமப்போலி
வினை, [5]
பயன், [6]
மெய், [7]
உரு [8]
வினை,
பயன்,
உறுப்பு,
உரு,
பிறப்பு [9]

அடிக்குறிப்பு[தொகு]

 1. வினை, பயன், மெய், உரு, என்ற நான்கே
  வகை பெற வந்த உவமத் தோற்றம். (தொல்காப்பியம் 3-272)
 2. உவமப் போலி ஐந்து' என மொழிப (தொல்காப்பியமு 3-295)
 3. தவல் அருஞ் சிறப்பின் அத் தன்மை நாடின்,
  வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்
  பிறப்பினும் வரூஉம் திறத்த' என்ப . (தொல்காப்பியம் 3-296)
 4. தொல்காப்பியம் 3-296 இளம்பூரணர் உரை, அடிக்குறிப்பு
 5. புலி போலப் பாய்ந்தான்
 6. மழை போல் வழங்கினான்
 7. பவளம் போன்ற வாய்
 8. துடி போலும் இடை
 9. நினக்குவமையில்லை என்னும்வழிச் செயலானாதல். பயனானாதல். உறுப்பானாதல், உருவானாதல், பிறப்பானாதல் ஒப்பாரில்லையெனல் வேண்டும் என்பது கருத்து. பிறவு மன்ன - இளம்பூரணர் விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உவமப்போலி&oldid=1540996" இருந்து மீள்விக்கப்பட்டது