உள்ளடக்கத்துக்குச் செல்

உழைக்கும் மக்களின் முற்போக்கு கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உழைக்கும் மக்களின் முற்போக்கு கட்சி (Progressive Party of Working People) என்பது சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமை அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி கிரேக்க மொழியில் Ανορθωτικό Κόμμα Εργαζόμενου Λαού என அழைக்கப்படுகிறது. கிரேக்கப்பெயரின் முதலெழுத்துக்களைக்கொண்டு சுருக்கமாக AKEL என அழைக்கப்படுகிறது. இந்தக் கட்சி 1926-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிமிட்ரிஸ் கிரிஸ்டோஃபஸ் (ஆங்:Dimitris Christofias, கிரே: Δημήτρης Χριστόφιας) இருந்தார். இக்கட்சி ஹராவ்கி(Haravghi) என்ற இதழை வெளியிடுகிறது. இக்கட்சியின் இளையோர் அமைப்பு ஈடோன்(EDON) ஆகும்.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 131 066 வாக்குகளைப் (31.1%, 18 இடங்கள்) பெற்றது. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது.

2008 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான டிமிட்ரிஸ் கிரிஸ்டோஃபஸ்், 240 604 வாக்குகள் (53.37%) பெற்று வெற்றி பெற்றார்.[1]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-11-02. பார்க்கப்பட்ட நாள் 2007-11-02.