உழைக்கும் பெண்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உழைக்கும் பெண்கள் சங்கம் (Working Women Association) (சுருக்கமாக: WWA) ஐக்கிய அமெரிக்கா நாட்டின் நியூ யார்க் நகரில் 17 செப்டம்பர் 1868 அன்று தி ரெவல்யூஷன் அலுவலகத்தில், எலிசபெத் கேடி ஸ்டாண்டன் மற்றும் சூசன் பி. அந்தோனி ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் நோக்கம் உழைக்கும் பெண்களின் நலன்களை மேம்படுத்தவும், நாடு முழுவதும் உழைக்கும் பெண்களின் சங்கங்களை நிறுவுவதாகும்.[1] அமெரிக்காவின் முதல் தேசிய தொழிலாளர் ஒன்றியத்தின் (NLU), தேசிய தொழிலாளர் சங்க வருடாந்திர மாநாட்டின் பிரதிநிதியாக, உழைக்கும் பெண்கள் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான சூசன் பி. அந்தோணி தேர்வு செய்யப்பட்டார்..[2]

உழைக்கும் பெண்கள் சங்க உறுப்பினர் எண்ணிக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊதியம் பெறும் பெண்களும், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பெண்களும் அடங்குவர். அதன் ஆரம்ப நாட்களில் அச்சுத் தொழிலில் கவனம் செலுத்திய உழைக்கும் பெண்கள் சங்க உறுப்பினர்களில் அச்சு கடைகளில் பணிபுரியும் பெண்களும் (மற்றும் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் பெண் முதலாளிகள்) மற்றும் சுய-தொழில் அச்சுப் பணியாளர்களும் அடங்குவர்.

புதிய அமைப்பான தேசிய பெண் வாக்குரிமை சங்கம் நிறுவப்பட்டது. மேலும் அது ஒரு அமைப்பாக உறுதியாக நிலைநிறுத்தப்படும் வரை பெண்களின் வாக்குரிமைக்காக பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தது.[3] இந்த அமைப்பு த நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட செய்தித்தாட்களின் கவனத்தை ஈர்த்தது. பெண்கள் சம வேலைக்கு சம ஊதியம் கோரியதற்காக உழைக்கும் பெண்கள் சங்கத்தை கேலி செய்து ஒரு தலையங்கத்தை எழுதியது. பெண்கள் குறைவாக வேலை செய்ய விரும்புவது தொழிலாளர் சந்தையில் அவர்களுக்கு ஒரு நன்மையைக் கொடுத்தது என்று வாதிட்டது.

தொழிற்சங்கங்கள்[தொகு]

உழைக்கும் பெண்கள் சங்கம் பல உறுப்பினர்களுக்கு அச்சுக்கலை ஒன்றியத்தை உருவாக்க உதவியது. இது தேசிய அச்சுக்கலை ஒன்றியத்தின் ஆர்வத்தை ஈர்த்தது. இது பாரம்பரியமாக பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க மறுத்து வந்தது. அது இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட மகளிர் அச்சுக்கலை ஒன்றியத்தை ஒரு இணைப்பாக ஏற்க ஒப்புக்கொண்டது. பெண் உறுப்பினர்களை அனுமதிக்கும் இரண்டாவது தேசிய சங்கமாக (சுருட்டு தயாரிப்பாளர்களுக்குப் பிறகு) மாறியது.[4]

பெண் தொழிற்சங்க அச்சுக்கலை தொழிலாளர்கள் தங்கள் ஆண்களுடன் நெருக்கமாக வேலை செய்யத் தொடங்கியதால், உழைக்கும் பெண்கள் சஙகத்தின் உடனான அவர்களின் உறவுகள் பலவீனமடைந்தன.

உழைக்கும் பெண்கள் சங்கம், தையல் இயந்திரங்களை கையாள்பவர்களின் சங்கத்தை உருவாக்க முயற்சித்தது. ஆனால் இந்த முயற்சி தோல்வியடைந்தது. எனவே பெண் அச்சுப் பணியாளர்கள் மற்றும் தையல் இயந்திரத் தொழிலாளர்களுக்கான கூட்டுறவுக் கடைகளை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது.[5]

சிசுக் கொலையில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட வீட்டுப் பணியாளரான ஹெஸ்டர் வோனின் விடுதலையை வென்றெடுப்பதற்கான பிரச்சாரத்தில் தி ரெவல்யூசன் அலுவலகத்துடன் இணைந்து உழைக்கும் பெண்கள் சங்கம் முக்கிய பங்கு வகித்தது. சமூகம் மற்றும் சட்ட அமைப்புகள் பெண்களை அநியாயமாக நடத்துகின்றது என்று குற்றம் சாட்டி, உழைக்கும் பெண்கள் சங்கம் மனு அளிக்க, நியூ யார்க்கில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்தது. மேலும் சிறையில் ஹெஸ்டர் வேனைச் சந்திக்கவும், ஆளுநருடன் பேசவும் பிரதிநிதிகளை அனுப்பியது. ஹெஸ்டர் வான் இறுதியில் மன்னிக்கப்பட்டார்.[6]

ஹெஸ்டர் வான் விடுதலைப் பிரச்சாரம் நடுத்தர வர்க்கப் பெண்களை உழைக்கும் பெண்கள் சங்கத்தை ஈர்த்தது. அதே நேரத்தில் ஊதியம் பெறும் பெண்கள் இதில் ஆர்வத்தை இழக்கின்றனர். 1869ல் பத்திரிக்கையாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் உட்பட, கிட்டத்தட்ட முழுக்க முழுக்க நடுத்தர வர்க்க உழைக்கும் பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர்..[7] சூசன் பி. அந்தோனி மற்றும் ஸ்டாண்டன் 1869ம் ஆண்டில் தேசிய பெண் வாக்குரிமை சங்கத்தை (NWSA) உருவாக்கியபோது, அதன் நியூ யார்க் நகரப் பிரிவு பெரும்பாலும் உழைக்கும் பெண்கள் சங்க உறுப்பினர்களால் ஆனது. அவர்கள் முன்பு போலவே அதே வேலையில் ஈடுபட்டுக் கொண்டே, தேசிய பெண் வாக்குரிமை சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். 1869 டிசம்பரில் உழைக்கும் பெண்கள் சங்கம் கலைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Revolution, September 24, 1868, p. 181. Quoted in Flexner (1959), p. 128
  2. Balser (1987), p. 65
  3. DuBois (1978), pp. 134–135
  4. DuBois (1978), pp. 142, 154
  5. DuBois (1978), p. 144
  6. Balser (1987), p. 72
  7. DuBois (1978), p. 193

ஊசாத்துணை[தொகு]