உழிஞைக் கொடி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உழிஞைக் கொடி (cassytha filiformis) உயிருள்ள மரவகைகளை மூடிக்கொண்டு படரும் ஒருவகை காட்டுக்கொடி. இக் கொடி மரத்தை மூடிக்கொண்டு படர்வதுபோல பகைவர் மதிலைப் படை வீரர்கள் முற்றுகையிடும் போர்முறையைத் தமிழ் இலக்கணங்கள் உழிஞைத் திணை எனக் குறிப்பிடுகின்றன. இந்த மதில் போரைப் பற்றிப் பாடப்பட்ட 30 பாடல்களைக் கொண்ட நூல் தொகுப்பைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாகப் பிற்காலப் பாட்டியல் நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனை இக்காலத்தில் கொற்றான் என்றும், முடக்கொற்றான் என்றும் நாட்டுப்பற மக்கள் வழங்குகின்றனர். மக்களை ஆளும் அரசன் (கொற்றவன்) போல மரத்தை ஆண்டுகொண்டு படரும் கொடியைக் கொற்றான் என்பது மரூஉ-மொழி. மரங்களை மூடி முடமாக்கும் கொற்றானை முடக்கொற்றான் என்பதும் காரணப்பெயர்.