உழவர் வாழ்வியல் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிருஷ்ணகிரி உழவர் வாழ்வியல் முறை

கிருஷ்னகிரி மாவட்டம் மிகுதியான மலைகளையும் காடுகளையும் கொண்டது. இங்கு தென்பென்னை, சின்னாறு, மார்கண்ட நதி ஆகிய நதிகள் பாய்வதால் இம்மாவட்டத்தில் விவசாயம் சிறப்புற்று விளங்குகிறது.

உணவு[தொகு]

முக்கிய உணவு சோறு. அடுத்து கேழ்வரகு களி முக்கிய இடத்தைப்பெறுகிறது. புடிப்பறிவுள்ள விவசாயக் குடும்பங்களில் இட்லி, தோசை,டீ, காபி போன்றவை உணவில் இடம்பெறுகின்றன.

உடை[தொகு]

பெண்கள் சேலை- ஜாக்கட் அணிகின்றனர. இளம் பெண்கள் சுடிதார- மேல்சட்டை அணிகின்றனர. ஆண்கள் வேட்டி(அ) லுங்கி அணிகின்றனர. இளைஞர்கள் பேண்ட்- சட்டை அணிகின்றனர். சிறுவர்கள், குழந்தைகள் ரெடிமேட் துணிகளை வாங்கி அணிகின்றனர்.

வாழ்விடம்[தொகு]

விவசாயிகள் கிராமங்களில் சிறு (அ) குறு மாடிவீடுகளில் வசித்துவருகின்றனர். குடிசை வீடுகளும் ஓட்டு வீடுகளும் குறைவாக உள்ளன. அரசு தெருக்களுக்கு சிமெண்ட் சாலை அமைத்து தருகிறது. எனவே விவசாயிகள் வீடுகளும் தெருக்களும் நாகரீக முன்னேற்றத்தில் உள்ளன.

கல்வி[தொகு]

பள்ளிக் கல்வியை முடித்தவர்கள், பாதியில் நின்றவர்கள், மேற்படிப்பு படிப்பவர்கள் என அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப கல்விநிலை உள்ளது. தற்போதுதான் இந்த விவசாயிகளிடம் கல்வி குறித்த விழிப்புண்வு ஏற்பட்டு வருகிறது.

தொழில்[தொகு]

ஏர் உழுதல், உரம் இடுதல், நாற்று நடுதல், களைப்பறித்தல், நீர்பாய்ச்சுதல், மலர் பரித்தல், அறுவடை செய்தல் போன்ற பலவேலைகளைச் செய்கின்றனர். புல இளைஞர்கள் இராணுவத்தில் பணியாற்றுகின்றனர். சிலர் பரவலாக பலதுறைகளில் பணியாற்றுகின்றனர்.

பேசும் மொழி[தொகு]

துமிழ், தெலுங்கு, கன்னடம்.

திருமண முறை[தொகு]

அக்கினி வளர்த்து,மந்திரம் ஓதி, ஐயர் தாலி எடுத்து கொடுத்து, மணமகன் மணமகளுக்கு தாலி கட்டும் வழக்கம் உள்ளது. திருமணம் மணமகன் இல்லத்தில் நடந்த நிலை சிறிது சிறிதாக மாறி திருமண மண்டபங்களில் நடைபெறுகிறது.

வழிபாடு[தொகு]

அம்மன, வீரன், ஐயனாரப்பன் ஆகியவை கிராமத்தெய்வங்கள் இவையே குலத்தெய்வங்களாகவும் வழிபடப்படுகின்றன. தவிர சிவன், பெருமாள் ஆகிய கடவுளையும் வழிபடுகின்றனர்.

{{துணை நுால்:முனைவர் கோ. விருது, பன்முகநோகிகில் கிருஷ்ணகிரி மாவட்டம்,ஜோதிராஜன் பதிப்பகம்,ஓசூர், 2010.}}

{{பார்வை: "NE Monsoon Worst In 140 Years, 144 Farmers Dead, Tamil Nadu Declares Drought". IndiaSpend. 2017-01-10. Retrieved 2017-02-23. Jump up ^ "Northeast Monsoon to end on deficit note for Tamil Nadu". Skymet Weather. 2016-12-21. Retrieved 2017-02-23. Jump up ^ "Tamil Nadu declares drought as 144 farmers die amid worst North East monsoon in 140 years". Firstpost.com. Retrieved 2017-02-23. Jump up ^ "TN to be declared drought-hit; CM announces sops for farmers : PTI feed, News - India Today". Indiatoday.intoday.in. 2017-01-10. Retrieved 2017-02-23}}

"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவர்_வாழ்வியல்_முறை&oldid=2723490" இருந்து மீள்விக்கப்பட்டது