உழவன் விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உழவன் விரைவு ரயில்
கண்ணோட்டம்
வகைவிரைவு இரயில்
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
நடத்துனர்(கள்)இந்திய இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர்
இடைநிறுத்தங்கள்15
முடிவுதஞ்சாவூர் சந்திப்பு
ஓடும் தூரம்351 km (218 mi)
சராசரி பயண நேரம்7.75 மணி
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்16866/16865
பயணச் சேவைகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
காணும் வசதிகள்பெரிய சாளரம்
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்45 km/h (28 mph) நிறுத்த நேரம் உட்பட சராசரி

உழவன் விரைவு ரயில் அல்லது உழவன் விரைவுத் தொடருந்து (ஆங்கிலம்: Uzhavan Express) என்பது சென்னை எழும்பூர் சந்திப்பிற்கும் தஞ்சாவூர் சந்திப்பிற்கும் இடையில் ஓடும் விரைவுத் தொடருந்தாகும். காவேரிப் பாசனப்பகுதி உழவர்களின் மாண்பை எடுத்துரைக்கும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வண்டி செப்டம்பர் 1, 2013 முதல் அறிமுகம் செய்யப்பட்டு நாள்தோறும் 351 கி.மீ பயணம் செய்கிறது.[1] பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), கும்பகோணம், ஆடுதுறை, குற்றாலம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் (நகரம்), கடலூர் கோட்டை சந்திப்பு, பண்ணுருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகியவை இதன் நிறுத்தத் தடங்களாகும். இதின் 18 பெட்டிகளில் இரண்டாம் வகுப்பு படுக்கை, இரண்டாம் வகுப்பு குளிர்சாதன இருக்கை மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை உள்ளடக்கமாகக் கொண்டு 1,288 பயணயிடங்களைக் கொண்டுள்ளது.[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uzhavan Express/16183". Indian Railway. பார்த்த நாள் 2 September 2013.
  2. nadu/High-drama-at-Uzhavan-Express-inauguration-leaves-one-dead/2013/09/02/article1763485.ece "High drama at Uzhavan Express inauguration leaves one dead". New Indian Express. http://newindianexpress.com/states/tamil nadu/High-drama-at-Uzhavan-Express-inauguration-leaves-one-dead/2013/09/02/article1763485.ece. பார்த்த நாள்: 2 September 2013.