உழக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உழக்குடி (Uzhakkudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொல்லியல் கிராமமாகும். இக்கிராமம் சிறீவைகுண்டம், வல்லநாடு குறுவட்டத்தில், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கலியாவூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. உழக்குடி கிராமத்தில் கிமு 1,000 முதல் கிமு 3,000 வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறந்த அரசர்கள் மற்றும் தலைவர்களை அடக்கம் செய்வதற்காக அமைக்கப்பட்ட கல்வட்டம், நினைவுத்தூண் போன்ற நினைவுச் சின்னங்கள் இக்கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இரும்பு உருக்கும் பட்டறைகளின் எச்சங்களும் பழங்காலக் கோப்பைகள் மற்றும் பல்லாங்குழிகளும் இக்கிராமத்தில் கிடைத்துள்ளன.[1]

இக்கிராமம் குறித்த செய்திகள் சங்க இலக்கிய நூலான அகநானூறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உழக்குடி கிராமத்தில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [2][3][4]

அமைவிடம்[தொகு]

உழக்குடி கிராமம், தூத்துக்குடியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உழக்குடி&oldid=3640723" இலிருந்து மீள்விக்கப்பட்டது