உள்ளூர் உணவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளூர் உணவு அல்லது உள்ளூர் உணவு இயக்கம் (locavores) என்பது உள்ளூர் உணவு உண்பதை ஊக்கப்படுத்தும், ஆதரவு கொடுக்கும் ஒரு சமூக இயக்கமாகும். உள்ளூர் உணவே தற்சார்பு மிக்க பொருளாதாரத்திற்கு, சூழலுக்கு, தரமான நல உணவுக்கு சிறந்தது என்பது இவர்களின் கருத்து ஆகும்.

இந்த இயக்கம் மேற்குநாடுகளில் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ளூர் உணவு இயல்பான ஒரு கூறாக உள்ளது. எனினும், பன்னாட்டு வணிகங்களின் வருகையால் இந்த நிலைமை வேகமாக மாறி வருகிறது.

உள்ளூர் உணவு, உள்ளூர் உணவு இயக்கம் அல்லது உள்ளூர் உணவாளர்களின் இயக்கம் இவற்றின் முக்கிய நோக்கமே ஒரே புவியியல் பிரதேசத்தில் இருக்கக்கூடிய உணவு உற்பத்தியாளர்களையும், உணவு நுகர்வோர்களையும் இணைத்து, அவர்கள் வளர்ச்சியிலும், உணவு வலையத்திலும் தன்னிறைவு பெறச் செய்வதாகும். உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவது (அ) ஒரு குறிப்பிட்ட இடம் சார்ந்த மக்கள் சமுதாயத்தின் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தில் ஒரு தாக்கம் ஏற்படுத்துவதாகும். இச்சொல் ஒரு புவியியல் அமைவிடம் சார்ந்த அளிப்போரையும், நுகர்வோரையும் உள்ளடக்குவதில் மட்டுமன்றி, சமூக மற்றும் அளிப்பு தொடர்பான பண்புகளையும் வரையறை செய்வதாகும். உதாரணமாக உள்ளூர் உணவை முன்னெடுப்பவர்கள் அடிக்கடி தங்கள் நிலையான, உள்ளூர் இயற்கை வேளாண்மை முறைகளை அவர்கள் புவியியற் சார்ந்த உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் சரியான, நேரடித் தொடர்பு இல்லை என்ற போதும் முன்னெடுக்கின்றனர். உலகளாவிய உணவு மாதிரிகள், நீண்ட தொலைவு கடந்து, நுகர்வோரை அடைவதற்கு முன்பாகவே, உள்ளூர் உணவுகள் ஒரு மாற்றாக நுகர்வோரை அடைந்து விடுகின்றன. ஒரு உள்ளுர் உணவு வலையமானது, ஒரு இடத்தின் உணவு பாதுகாப்பு அதிகரிக்க, பொருளாதார, சூழல் சார்ந்த சமூக நிலைத்தன்மை ஏற்படுத்த சமூகத்திலுள்ள உணவு உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரிடையே ஒரு உறவு முறையை ஏற்படுத்துகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளூர்_உணவு&oldid=2744591" இருந்து மீள்விக்கப்பட்டது