உள்நோக்குக்கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு நெகிழ்வான உள்நோக்குக்கருவி
போசினியின் ஆரம்ப கால உள்நோக்குக்கருவி வரைபடங்கள்

உள்நோக்குக்கருவி (Endoscope) என்பது என்பது மருத்துவ நோக்கில் உடலின் உட்பகுதியைப் பார்க்கப் பயன்படும் ஒரு கருவியாகும். பொதுவாக இது கண்ணாடியாலான மெல்லிய குழாய் கருவியாகும். அக நோக்குக் கருவி என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

உடலில் ஆழமாகப் பார்க்கப் பயன்படும் இச்செயல்முறை உள்நோக்கியல் எனப்படுகிறது. குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் போன்றவற்றைக் கண்டறிந்து நோய்வராமல் தடுத்துக் கொள்ள உள்நோக்கியல் பரிசோதனைகள் உதவுகின்றன.[1]

உள்நோக்குக்கருவிகள் ஒரு மில்லிமீட்டர் தடிமன் கொண்ட குழாய்களைப் பயன்படுத்துகின்றன. இக்குழாய்கள் ஒரு திசையில் ஒளியை செலுத்தவும், உயர்-தெளிவுத்திறன் கொண்ட படங்களை மற்றொரு திசையில் நிகழ்நேரத்தில் பெறவும் பயன்படுகின்றன. இதன் விளைவாக குறைந்தபட்ச துளையிடும் அறுவை சிகிச்சைகள் ஏற்படுகின்றன.[2] "எண்டோ" என்பது "உள்ளே" என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லாகும். சுகோப் என்பது இலக்கு அல்லது உள்நோக்குதல் என்ற பொருள் கொண்ட கிரேக்க வார்த்தையான "சுகோபோசு" என்ற சொல்லிலிருந்து பெறப்படுகிறது. தொண்டை அல்லது உணவுக்குழாய் போன்ற உள் உறுப்புகளை ஆய்வு செய்ய உள்நோக்குக்கருவி பயன்படுகிறது. சிறப்பு கருவிகள் அவற்றின் இலக்கு உறுப்பின் அடிப்படையில் பெயரிடப்படுகின்றன. சிறுநீர்ப்பையை உள்நோக்க உதவும் கருவியை சிறுநீர்ப்பை உள்நோக்குக்கருவி என்றும் மூச்சுக்குழாயை உள்நோக்க உதவும் கருவியை மூச்சுக்குழாய் உள்நோக்குக்கருவி என்றும் அழைப்பது போன்றவை சில உதாரணங்களாகும். இதைப்போலவே மூட்டுகள், வயிறு, இடுப்பு, பெருங்குடல் போன்ற உடலின் பல்வேறு உறுப்புகளை உள்நோக்கும் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.[3] இக்கருவிகள் உள் உறுப்புகளை பார்வையிட்டு ஆராயவும் கண்டறியவும் அல்லது மூட்டு அகநோக்கிகள் போல அறுவை சிகிச்சைக்கு உதவவும் பயன்படுத்தப்படலாம்.

மருத்துவம் அல்லாத பயன்பாடுகளுக்கு, ஒத்த கருவிகள் துளைநோக்கிகள் என்று அழைக்கப்படுகின்றன. சமீப காலங்களில் மின்னியல் துளைநோக்கிகள் பரவலாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன, மேலும் இவை பெரும்பாலும் உள்நோக்குக்கருவிகளாகவும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்நோக்குக்கருவி&oldid=3249910" இருந்து மீள்விக்கப்பட்டது