உளுந்தூர்பேட்டை வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உளுந்தூர்பேட்டை வான்படை தளம் (Ulundurpettai Air Force Base) உளுந்தூர்பேட்டை நகரத்திற்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத விமான படை தளம் நிலையமாகும். இந்த விமான தளம் இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களால் விமான தளமாகப் பயன்படுத்தப்பட்டது.[1] பின்னர் இது பயன்படுத்தப்படாமல் விட்டுவிட்டு தரிசு நிலமாக மாறியுள்ளது. இருப்பினும் இதனுடைய வான்வழி பாதை சேதமடையவில்லை.[2]

இந்தியக் கடலோர காவல்படை இந்த விமான நிலையத்தைப் பயன்பாட்டில் கொண்டுவர முயன்றது, ஆனால் இந்த பணி அறியப்படாத காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. [3] நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன திறப்பு விழாவின் போது இந்த வான்வழிப் பாதை கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு பயன்படுத்திய விமானம் இந்த விமானப் பாதையினைப் பயன்படுத்தித் தரையிறங்கியது.

இப்போது இந்த வான்வழிப் பகுதியை உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையமாக நிர்மாணிக்கும் திட்டத்துடன் இந்திய அரசு முயற்சி மேற்கொண்டுடது .[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Land on the runway of memories". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  2. "New dot on aviation map". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "Centre identifies 13 unserved airports in TN under Udan scheme". https://www.thehindu.com/news/cities/chennai/Centre-identifies-13-unserved-airports-in-TN-under-Udan-scheme/article16722066.ece.