உளுந்தங்களி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உளுந்தங்களி என்பது உளுந்தினை முதன்மையாக கொண்டு தயாரிக்கப்படும் ஒரு உணவு ஆகும். உளுந்து, புரதச் சத்து நிறைந்தது என்பதால், உளுந்தங்களி உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும் என நம்பப்படுகிறது.[1]

செய்முறை[தொகு]

தேவையான பொருட்கள்[தொகு]

  • வெள்ளை உளுந்து - 100 கிராம்
  • பனை வெல்லம் - 200 கிராம்
  • நல்லெண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - ஒரு சிட்டிகை.

வெள்ளை உளுந்தை கடாயில் நன்கு வறுத்து ஆறியபின் மாவாக பொடி செய்து கொள்ள வேண்டும். பனை வெல்லத்தை 500 மி.லி. தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். ஒரு கனமான பாத்திரத்தில் வெல்லக்கரைசலை நன்கு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது உளுந்து மாவை சிறிது சிறிதாக தூவி கிளறவும். ஒரு சிட்டிகை உப்பு போடவும். மாவு நன்கு வெந்துவரும்போது சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி கிளறி இறக்க வேண்டும். இது சுவையான, சத்தான உணவாகும்.

இது காலை நேரச் சிற்றுண்டியாகவும் உண்ணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/
  2. "உளுந்து களி.. காலை உணவுக்கு சிறந்தது..." News18 Tamil. 2021-11-17. பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளுந்தங்களி&oldid=3510455" இலிருந்து மீள்விக்கப்பட்டது