உள்ளடக்கத்துக்குச் செல்

உளிக்கல்

ஆள்கூறுகள்: 12°2′0″N 75°39′0″E / 12.03333°N 75.65000°E / 12.03333; 75.65000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உளிக்கல்
Ulikkal
Ulickal
நகரம்
மலைப்பாதை மாநில நெடுஞ்சாலை நுச்சியாத் , உளிக்கல்
மலைப்பாதை மாநில நெடுஞ்சாலை நுச்சியாத் , உளிக்கல்
உளிக்கல் Ulikkal is located in கேரளம்
உளிக்கல் Ulikkal
உளிக்கல்
Ulikkal
Location in Kerala, India
உளிக்கல் Ulikkal is located in இந்தியா
உளிக்கல் Ulikkal
உளிக்கல்
Ulikkal
உளிக்கல்
Ulikkal (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°2′0″N 75°39′0″E / 12.03333°N 75.65000°E / 12.03333; 75.65000
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கேரளம்
மாவட்டம் (இந்தியா)கண்ணூர் மாவட்டம்
கேரளத்தின் வட்டங்களின் பட்டியல்இரிட்டி
அரசு
 • வகைஇந்தியாவின் ஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்Ulikkal Grama Panchayat
பரப்பளவு
 • மொத்தம்74.68 km2 (28.83 sq mi)
ஏற்றம்43 m (141 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்35,429
 • அடர்த்தி470/km2 (1,200/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
670705
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுகே.எல்.-78
தேர்தல் தொகுதிஇரிக்கூர் சட்டமன்றத் தொகுதி
மக்களவை (இந்தியா) தொகுதிகண்ணூர் மக்களவைத் தொகுதி
இந்தியாவின் தட்பவெப்ப நிலைஇந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென் காலநிலை வகைப்பாடு)
இணையதளம்www.ulikkal.com


உளிக்கல் (Ulikkal) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம்.[3] இரிட்டி வட்டத்தில் உலிக்கல் ஊராட்சி உள்ளது. கேரள மாநில மலைப்பாதை மாநில நெடுஞ்சாலை எண் 59 இக்கிராமம் வழியாக செல்கிறது. இந்த கிராம ஊராட்சி தன்னுடைய எல்லையை அருகிலுள்ள கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்திலுள்ள கலங்கி கோடை வாழிடம் அருகே உள்ளது.

இடம்

[தொகு]

கிராமமானது, இரிட்டி வட்ட தலைமையகத்திலிருந்து வடக்கே சுமார் 7 கி.மீ தொலைவிலும், கண்ணூரில் உள்ள மாவட்ட தலைமையகத்திலிருந்து 46 கி.மீ தொலைவிலும், கேரள - கர்நாடக எல்லைக்கு அருகில் உள்ள கூட்டபுழாவிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[4]

மக்கள்தொகை

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராம ஊராட்சியில் மக்கள் தொகையானது 35,429 ஆக இருந்தது, இதில் 17,457 ஆண்கள், பெண்கள் 17,952 பேர் இருந்தனர். இதன் பாலின விகிதம் 1,028 ஆகும், இது மாநில சராசரியான 1,084 ஐ விடக் குறைவு. 0–6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,648 (10.3%) ஆகும், இதில் 1,895 ஆண் குழந்தைகளும் மற்றும் 1,753 பெண்குழந்தைகளும் இருந்தனர். இதன் ஒட்டுமொத்த கல்வியறிவு விகிதம் 94.8% ஆகும், இது மாநில சராசரியான 94% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 96.6% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 93.1% ஆகவும் உள்ளது.

உலிக்கல் கிராம ஊராட்சியானது அதன் நிர்வாக அதிகார வரம்பிற்கு உட்பட்ட நுச்சியாத் மற்றும் வயத்தூர் ஆகிய இரண்டு வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. [5]

வரலாறு

[தொகு]

இந்த கிராமமானது வயத்தூர் கிராம ஊராட்சிக்கு அருகில் அமைந்துள்ளது. அல்லது பைத்தூர் (வயத்தூர்) கோயிலுக்கு தாயகமாக உள்ளது. 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானதாக நம்பப்படும் பைத்தூரப்பா (வயத்தூரப்பன்) வயத்தூர் காளியர் சிவன் கோவிலாகும். இந்த கோவிலானது ஊராட்சியில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றாகும். இது நகரத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் வளபட்டணம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த நதி குடகில் உருவாகி பரிக்களம் மற்றும் நுச்சியாட் கிராமங்கள் வழியாக பாய்கிறது.

குடகு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள வயத்தூரில் உள்ள ஈசுவரன் ( சிவன் அல்லது மகாதேவா) கோவிலானது, குடகிலுள்ள கொடவர்களின் முக்கியமான யாத்திரை மையமாகும். கொடவர்களும், மலையாளிகளும் இணைந்து ஆண்டுதோறும் இந்த கோவில் திருவிழாவை பாரம்பரியமாக கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. வரலாற்று கலத்திலிருந்தே குடகிலுள்ள நம்பூதிரி பிராமணர்கள் இந்த கோவின் பூசாரிகளாவர். கண்ணூர் மாவட்டத்தின் எல்லையான குடகு, உலிக்கல் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. [6][7]

உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின்படி, குடகில் வழிபடும் தெய்வங்கள் கேரள வம்சாவழியைச் சேர்ந்தவை, மேலும் அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவிலிருந்து இன்றைய எல்லைக்கு அருகிலுள்ள வயத்தூர் (பைத்தூர்) வழியாக குடகிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. வரலாற்று ரீதியாக, உலிக்கல் வயத்தூர் பகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.[8]

நிர்வாகம்

[தொகு]

உலிக்கல் கிராம ஊராட்சியானது, நுச்சியாத் மற்றும் வயத்தூர் என்ற இரண்டு வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது , மேலும் இந்த பஞ்சாயத்து 22 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்தின் தற்போதைய ஆளும் கட்சி யுடிஎஃப் ஆகும்.[9] உலிக்கல் பஞ்சாயத்து, இரிக்கூர் தொகுதி பஞ்சாயத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் அரசியல் ரீதியாக கண்ணூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இரிக்கூர் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[10]

சட்டம் மற்றும் ஒழுங்கு

[தொகு]

இந்த,கிராம ஊராட்சியானது 1972 நவம்பர் 18 அன்று நிறுவப்பட்ட உலிக்கல் காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. இந்த காவல் நிலையம் கண்ணூர் கிராமப்புற காவல் மாவட்டத்தின் கீழ் உள்ள இரிட்டி துணைப்பிரிவின் ஒரு பகுதியாகும்.[11]

புவியியல்

[தொகு]

கண்ணூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைப்பாங்கான கிராமம் உலிக்கல் ஆகும் . நிலப்பரப்பு பொதுவாக அலை அலையானது, மேலும் இப்பகுதியின் கிழக்குப் பகுதி கர்நாடக மாநிலத்தை ஒட்டிய காடுகளால் சூழப்பட்டுள்ளது .

பொருளாதாரம்

[தொகு]

இக் கிராமத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கை விவசாயமாகும். ரப்பர், முந்திரி, தேங்காய் மற்றும் பாக்கு ஆகியவை முக்கிய பயிர்களாக பயிரிடப்படுகின்றன. 2018 கேரள வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளில் உலிக்கல் ஒன்றாகும், இது விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. சுமார் 12 ஹெக்டேர் பயிர் செய்யப்பட்ட பகுதி, முக்கியமாக ரப்பர் மற்றும் முந்திரி தோட்டங்கள், பலத்த காற்றால் அழிக்கப்பட்டன. பஞ்சாயத்திற்குள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் நடுநில சரிவுகள் (சுமார் 43 மீ உயரம்) மற்றும் நடுநில மலைப்பகுதிகள் (சுமார் 178 மீ உயரம்), இதில் கலங்கி, கோலிதட், வயத்தூர், அரபிகுளம் மற்றும் கொக்காடு ஆகியவை அடங்கும்.[12]

போக்குவரத்து

[தொகு]

கேரள மாநில நெடுஞ்சாலை எண் 59, உலிக்கல் வழியாகச் சென்று, கண்ணூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளும் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுடன் நகரத்தை இணைக்கிறது. வட்ட தலைமையகமான இரிட்டி, சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. உலிக்கல்லுக்கு கிழக்கே உள்ள சாலை மைசூர் மற்றும் பெங்களூருக்கு அணுகலை வழங்குகிறது.[13]

தேசிய நெடுஞ்சாலை எண் 66, தளிப்பரம்பா வழியாக செல்கிறது, இது உலிக்கலில் இருந்து சுமார் 43 கி.மீ தொலைவில் உள்ளது. நெடுஞ்சாலையின் வடக்குப் பகுதி மங்களூர் மற்றும் மும்பைக்கு அணுகலை வழங்குகிறது, அதே நேரத்தில் தெற்குப் பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்துடன் இணைகிறது . அருகிலுள்ள ரயில் நிலையம் ஷோரனூர் -மங்களூர் பிரிவு பாதையில் கண்ணூர் ஆகும் .

அருகிலுள்ள விமான நிலையம் கண்ணூர் சர்வதேச விமான நிலையம் ஆகும், இது உலிக்கலில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தலச்சேரி , கண்ணூர் மற்றும் தளிப்பரம்பா ஆகிய நகரங்கள் அனைத்தும் உலிக்கலில் இருந்து ஒரே மாதிரியான தொலைவில் உள்ளன.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "ulikkal elevation map". topographic-map.com.
  2. {{cite web}}: Empty citation (help)
  3. "DE Status". Local Self Government Department, Government of Kerala. Retrieved 5 October 2025.
  4. "Routes & Locations". Kerala Tourism. Retrieved 5 October 2025.
  5. Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Kannur (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. pp. 278–279. Retrieved 14 July 2020.
  6. "Ainmanes (Baithurappa, Vayathur Appa)". Retrieved 24 January 2014.
  7. Sivakiran (11 April 2009). "Ulikkal Vayathur Kaliyar Temple". Blogspot. Retrieved 23 January 2014.
  8. "Ainmanes (Kodagu Kalyat)". Retrieved 24 January 2014.
  9. "Ward list of Ulikkal". sec.kerala.gov.in.
  10. "About - Ulikkal police station".
  11. "Soil and Flood Report" (PDF). Kerala State Disaster Management Authority. Retrieved 5 October 2025.
  12. "Soil and Flood Report" (PDF). Kerala State Disaster Management Authority. Retrieved 5 October 2025.
  13. "Hill Highway in Kerala; DPR ready for just 79 kms". Mathrubhumi. https://english.mathrubhumi.com/news/kerala/hill-highway-in-kerala-dpr-ready-for-just-79-kms-english-news-1.1353756. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளிக்கல்&oldid=4444718" இலிருந்து மீள்விக்கப்பட்டது