உளவியல் புதினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உளவியல் புதினம் (Psychological novel) என்பது ஒரு இலக்கிய வகை ஆகும். [1] இப்புதினங்கள் அகமனப் பாத்திரப் படைப்புக்கும் வெளிப்புற நடவடிக்கைக்கான நோக்கங்கள், சூழ்நிலைகள், உள் நடவடிக்கைகள் இவற்றுக்கும் முதன்மை தருகின்றது. இவை என்ன நடந்தது என்று கூறுவதில் மன நிறைவடையாமல் செயல்களின் உள்நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. பாத்திரமும் பாத்திரப் படைப்பும் முதன்மை வாய்ந்ததுலிவ்வகை புதினங்கள் மற்ற வகைகளை தவிர்த்து அடிக்கடி பாத்திரங்களின் உளவியல் பான்மைகளை விவரிப்பதில் மூழ்கி விடுகிறது. உளவியல் புதினங்கள் என்பது மனிதர்களின் உளவியல் சிந்தனை ஓடைகள் பற்றிய கதைகள் ஆகும். சில கதைகள் தனிமையில் பேசுவது(உணர்வோடை), நினைவுகள் மீட்பு(மலரும் நினைவுகள்) போன்றவைகளைப் பயன்படுத்திப் பாத்திரங்களின் உளப்பான்மைகளை விளக்குவதற்குப் பயன்படுத்துவார்கள்.

தொடக்க கால புதினங்கள்[தொகு]

ஜென்ஜியின் கதை, ஜப்பானில் 11-வது நூற்றாண்டில் எழுதப்பட்ட இப்புதினமே முதல் உளவியல் புதினமாக கருதப்படுகிறது. உளவியல் புதினம், ஒரு இலக்கிய வகையாக, முதலில் எழுச்சி பெற துவங்கியதற்கு முக்கிய எடுத்துக்காட்டு, சாமுவேல் இரிச்சர்டின் மனக்கிளர்ச்சி புதினமான பமீலா ஆகும்.

பிரெஞ்சு இலக்கியத்தில் சண்டாலின் சிவப்பு மற்றும் கருப்பு, தொடக்க கால உளவியல் புதினத்திற்கு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. புதினங்களின் கலைக்களஞ்சியத்தின்படி நவீன உளவியல் புதினத்தின் ஆரம்பம், நோபல் பரிசு பெற்றவரான நுட் ஆம்சனின் பட்டினி (1890), மர்மங்கள் (1892), பான் (1894), விக்டோரியா (1898) போன்ற நூல்களை கூறலாம்[2].

குறிப்பிடத்தக்க புதினங்கள்[தொகு]

இவ்வகையின் மிகப்பெரிய எழுத்தாளர் பியோதர் தோஸ்தோயவுசுகி ஆவார். இவருடைய புதினங்களில், குறிப்பாக கரமாசாவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும், அசடு போன்றவை பெரும்பாலும் பாத்திரங்கள் எவ்வாறு உண்மையான உலக சூழ்நிலைகளைக் கையாள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் இலக்கியத்தில் ஃஎன்றி ஜேம்சு, பாட்ரிக் மெக்கிராத், ஆர்த்தர் மில்லர், எடித் வார்டன் போன்றோர்கள் நடப்பு உளவியல் நடைமுறையைப் பயன்படுத்திய முக்கிய பங்களிப்பாளர்கள் ஆவார்கள்.

துணை வகைகள்[தொகு]

உளவியல் வியன்புனைவு என்பது கற்பனையான நடப்பு உளவியலை விவரித்துக் கிளச்சியூட்டும் புதினத்தின் வகை ஆகும். உள்மனம் பாத்திரங்களின் மனநிலை படைப்புகளில் வலியுறுத்தப்படுகின்றது. இதன் சிக்கல்கள் காரணமாக, இவ்வகையில் மர்மம், நாடகம், நடவடிக்கை , திகில்-பெரும்பாலும் உளவியல் திகில் உருவாக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இவை துப்பறியும் கதையின் ஒற்றுமைகளைப் பெற்றிருக்கும்.

உளவியல் திகில் : உளவியல் திகில் என்பது திகில்சார் உளவியல் புதினத்தின் வகை ஆகும். இக்கதை திகிலை உண்டாக்க பாத்திரத்தின் உளவியல், உணர்வு, மனக் கூறுகளை பயன்படுத்துகிறது.

உளவியல் நாடகம் : உளவியல் நாடகம் என்பது உளவியல்சார் நாடக, நாடகப் பாங்குப் புதின வகைகள் ஆகும். இந்நாடகப் படைப்பில் உணர்வோடை, மனக் கிளர்வு, உளவியல் தகவமைவுகளில் கவனம் செலுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Psychological_novel
  2. "Northern Europe". The Encyclopedia of the Novel, A–Li. (2011). Blackwell Publishing. 583. ISBN 978-1-4051-6184-8. அணுகப்பட்டது 6 February 2012. “The most significant novelist of the Scandinavian countries is Knut Hamsun, who almost singlehandedly created the modern psychological novel through the publication of four works that probe the human subconscious, Sult (1890, Hunger), Mysterier (1892, Mysteries), Pan (1894), and Victoria (1898).” 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளவியல்_புதினம்&oldid=3900200" இலிருந்து மீள்விக்கப்பட்டது