உல்ரிச்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உல்ரிச்சைட்டு
Ulrichite
Ulrichite-27441.jpg
உல்ரிச்சைட்டு
பொதுவானாவை
வகைபாசுபேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCaCu(UO2)[PO4]2•4H2O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
பிற சிறப்பியல்புகள்Radioactive.svg கதிரியக்கம்

உல்ரிச்சைட்டு (Ulrichite) என்பது CaCu(UO2)[PO4]2•4H2O).[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஆப்பிள் பச்சை நிறத்தில் ஒற்றைச் சரிவச்சுப் பட்டகங்களாக ஊசி வடிவத்தில் கதிரியக்கப் பண்பு கொண்ட கொத்துகளாக இக்கனிமம் படிகமாகிறது. [2] புற ஊதா ஒளியின் கீழ் இது அடர்த்தியான மஞ்சள் நிற ஒளிர்வை வெளிப்படுத்துகிறது. [1]

ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள இலேக் போகா நகரத்தின் கற்சுரங்கத்தில் 1988 ஆம் ஆண்டு முதன் முதலாக உல்ரிச்சைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. நியூசிலாந்து நாட்டின் 1830-1900 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த கனிமவியலாளர் சியார்ச்சு என்றி பிரடெரிக் உல்ரிச் நினைவாக இக்கனிமத்திற்கு உல்ரிச்சைட்டு எனப் பெயர் சூட்டப்பட்டது. [2] இவர் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரசு நிலவியலாளர் மற்றும் கனிமவியல் துறை ஆய்வாளராவார். இலேக் போகா நகரத்தின் கற்சுரங்கத்தில் மட்டுமே இக்கனிமம் கிடைப்பதாகவும் இக்கனிமத்தின் மாதிரி ஆத்திரேலியாவின் விக்டோரியா அருங்காட்சியகத்தில் #M38576 என்ற அட்டையாளத்துடன் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது[2]

கருங்கற் தீப்பாறைகளில் இரண்டாம் நிலையாக தோற்றம் கொள்கின்ற இது பாறைக் குழிகளில் காணப்படுகிறது. டர்க்குவாய்சு, சால்கோசிடரைட்டு, சிரிலோவைட்டு, தார்பெர்னைட்டு, இலிபெத்தினைட்டு, சாம்பிளைட்டு, சேலைட்டு மற்றும் புளோராபடைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்த நிலையில் பொதுவாக உல்ரிச்சைட்டு காணப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்ரிச்சைட்டு&oldid=2993077" இருந்து மீள்விக்கப்பட்டது