உல்ஃப் விளைவு
உல்ஃப் விளைவு (Wolf effect) என்பது மின்காந்த நிறமாலையில் ஏற்படும் ஓர் அதிர்வெண் மாற்றம் ஆகும். சில நேரங்களில் உல்ஃப் மாற்றம் என்ற பெயராலும் அறியப்படுகிறது.[1] இந்த நிகழ்வு கதிர்வீச்சு இயற்பியலுடன் பல நெருக்கமான தொடர்புடைய நிகழ்வுகளில் நிகழ்கிறது. ஒளியின் சிதறலிலும் ஒத்த விளைவுகள் ஏற்படுகின்றன.[2] முதன்முதலில் 1987 ஆம் ஆண்டில் எமில் உல்ஃப் என்பவரால் கணிக்கப்பட்டது.[3][4] அதைத் தொடர்ந்து மார்க் எஃப். போக்கோ, டேவிட் எச். டக்ளசு மற்றும் ராபர்ட் எசு. நாக்சு ஆகியோரால் ஒலி மூலங்களில் ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.[5] ஒரு வருடம் கழித்து 1988 ஆம் ஆண்டில் டீன் ஃபாக்லிசு மற்றும் சியார்ச்சு மோரிசு ஆகியோரால் ஒளியியல் மூலங்களில் உறுதிப்படுத்தப்பட்டது.[6]
கோட்பாட்டு விளக்கம்
[தொகு]ஒளியியலில், ஒளிக்கதிர் ஆற்றலை வெளியிடும் இரண்டு லாம்பர்ட் விதிக்கு ஒவ்வாத மூலங்கள் நிறமாலை கோடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்பு கொள்ளலாம். இது ஒரே மாதிரியான அதிர்வெண்கள் கொண்ட ஓர் இணை இசைக் கவைகளை ஒலி பலகையுடன் இயந்திரத்தனமாக இணைக்கப்பட்டுள்ளதற்கு ஒப்பானதாகும். ஒரு வலுவான இணைப்பு உள்ளதன் விளைவாக தொடர்ந்து ஒலிக்கின்ற அதிர்வெண்கள் சுருதியில் கீழே இழுக்கப்படுகின்றன. உல்ஃப் விளைவுக்கு, மூலங்களிலிருந்து வரும் அலைகள் பகுதியளவாவது ஒத்திசைவாக இருக்க வேண்டும் - அதாவது அலைமுகங்கள் பகுதியளவு ஒரே கட்டத்தில் இருக்க வேண்டும். லேசர் ஒளி ஒத்திசைவானது, ஆனால் மெழுகுவர்த்தி ஒளி ஒத்திசைவற்றது. ஒவ்வொரு ஒளியணுவும் சீரற்ற கட்டத்தைக் கொண்டுள்ளன. இது பார்வையாளரின் பார்வையைப் பொறுத்து சிவப்பு மாற்றங்களை அல்லது நீல மாற்றங்களை உருவாக்கலாம், ஆனால் பார்வையாளர் தலைகீழாக இருக்கும்போது சிவப்பு மாற்றப்படுகிறது.[3]
வெற்றிடத்தால் பிரிக்கப்பட்ட நிலையில் இடைவினை புரியும் இரண்டு மூலங்களைப் பொறுத்தவரை, உல்ஃப் விளைவு' அம்மூலத்தின் நிறமாலை வரியின் அகலத்தை விட அதிகமான அலைவரிசை நகர்வுகளை ஏற்படுத்த இயலாது. ஏனெனில், இவ்விளைவு என்பது மூலத்தின் நிறமாலைப் பரவலில் ஏற்படும், இருப்பிடத்தைச் சார்ந்த ஒரு மாற்றமே தவிர, புதிய அலைவரிசைகளை உருவாக்கும் ஒரு வழிமுறை அல்ல. இருப்பினும், ஓர் ஊடகத்துடன் இடைவினை புரியும்போது, பிரில்லுவான் சிதறல் போன்ற பிற விளைவுகளுடன் இணைந்து செயல்படுகையில், இது மூலத்தின் நிறமாலை வரி அகலத்தை விட அதிகமான, சிதைவுற்ற அலைவரிசை நகர்வுகளை ஏற்படுத்தக்கூடும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Emil Wolf, "Selected Works of Emil Wolf: With Commentary பரணிடப்பட்டது 2022-07-07 at the வந்தவழி இயந்திரம்" (2001) p.638, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-02-4204-2.
- ↑ James, Daniel F V (1998). "The Wolf effect and the redshift of quasars". Pure and Applied Optics: Journal of the European Optical Society Part A (IOP Publishing) 7 (5): 959–970. doi:10.1088/0963-9659/7/5/006. பன்னாட்டுத் தர தொடர் எண்:0963-9659. Bibcode: 1998PApOp...7..959J.
- 1 2 Wolf, Emil (1987). "Non-cosmological redshifts of spectral lines". Nature (Springer Science and Business Media LLC) 326 (6111): 363–365. doi:10.1038/326363a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. Bibcode: 1987Natur.326..363W. https://archive.org/details/sim_nature-uk_1987-03-26_326_6111/page/n83.
- ↑ Wolf, Emil (1987). "Redshifts and blueshifts of spectral lines caused by source correlations". Optics Communications (Elsevier BV) 62 (1): 12–16. doi:10.1016/0030-4018(87)90057-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-4018. Bibcode: 1987OptCo..62...12W. https://archive.org/details/sim_optics-communications_1987-04-01_62_1/page/13.
- ↑ Bocko, Mark F.; Douglass, David H.; Knox, Robert S. (1987-06-22). "Observation of frequency shifts of spectral lines due to source correlations". Physical Review Letters (American Physical Society (APS)) 58 (25): 2649–2651. doi:10.1103/physrevlett.58.2649. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9007. பப்மெட்:10034809. Bibcode: 1987PhRvL..58.2649B.
- ↑ Faklis, Dean; Morris, G. Michael (1988-01-01). "Spectral shifts produced by source correlations". Optics Letters (The Optical Society) 13 (1): 4—6. doi:10.1364/ol.13.000004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0146-9592. பப்மெட்:19741961. Bibcode: 1988OptL...13....4F.