உள்ளடக்கத்துக்குச் செல்

உலோரென்சோ லோடிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலோரென்சோ லோடிசி
Lorenzo Lodici
2019 ஆம் ஆண்டில் உலோரென்சோ லோடிசி
நாடு இத்தாலி
பிறப்பு16 ஏப்ரல் 2000 (2000-04-16) (அகவை 25)
பிரெசியா, இத்தாலி
பட்டம்கிராண்டு மாசுட்டர் (2021)
பிடே தரவுகோள்2523 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2575 (அக்டோபர் 2024)

உலோரென்சோ லோடிசி (Lorenzo Lodici) இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க பேராதன் ஆவார். 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு இத்தாலிய சதுரங்க வெற்றியாளராகத் திகழ்ந்தார். 2021 ஆம் ஆண்டு மிட்ரோபா கோப்பை சதுரங்கப் போட்டியை வென்றுள்ளார். 2022[1] மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் இத்தாலியின் சார்பாக பங்கேற்று விளையாடினார்.[2] 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இணையவழி சதுரங்க ஒலிம்பியாடு போட்டியிலும் இத்தாலிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3]

சதுரங்க வாழ்க்கை

[தொகு]

உலோரென்சோ லோடிசி இத்தாலி நாட்டின் பிரெசியாவில் பிறந்தார். ஆனால் வெனிசூக்கு அருகிலுள்ள சியோகியா என்ற நகரத்தில் வளர்ந்தார்.[4] 2016 ஆம் ஆண்டில் பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டத்தைப் பெற்ற பிறகு, 2017 ஆம் ஆண்டில் கோசென்சாவில் நடந்த இத்தாலிய இளையோர் சதுரங்கப் போட்டியை வென்றார்.

2018 ஆம் ஆண்டில், சலெர்னோவில் முதல் முறையாக இத்தாலிய சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார். போட்டி சமநிலையில் இருக்கும்போது வெற்றியாளரைத் தீர்மானிக்க நடைபெற்ற கூடுதல் ஆட்டத்தில் கிராண்ட்மாசுட்டர் ஆல்பர்டோ டேவிட்டை 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தார்.[5] இங்கு கிராண்ட்மாசுட்டர் பட்டத்திற்கான முதல் விதிமுறையைப் பெற்றார்.

2021 ஆம் ஆண்டில், கிராண்டு மாசுட்டர் பட்டத்திற்கான மற்ற இரண்டு விதிமுறைகளையும் பெற்று, கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை வென்றார். முதலாவது விதிமுறை சூன் மாதம் வில்லோர்பாவில் நடந்த லா மார்கா திறந்த நிலை போட்டியிலும்,[6] இரண்டாவது விதிமுறை செப்டம்பரில் மான்டெசில்வானோவில் நடந்த இத்தாலிய அணி சதுரங்க வெற்றியாளர் போட்டியிலும் கிடைத்தன.[7] ஏப்ரல் மாதம் இத்தாலிய அணியுடன் காத்திருப்பு பலகையில் விளையாடி மிட்ரோபா கோப்பையை வென்றார். அப்போட்டியில் 4.5/7 புள்ளிகளைப் பெற்றார்.

2022 ஆம் ஆண்டில், சென்னையில் நடந்த தனது முதல் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் பங்கேற்றார். இங்கு 3ஆவது பலகையில் விளையாடி 19ஆவது செயல்திறன் மதிப்பீட்டைப் பெற்றார். நார்வேநாட்டின் சிறப்பு கிராண்டுமாசுட்டர் இயான் லுட்விக் ஏமரை தோற்கடித்து,[8] இந்திய சதுரங்க குழந்தை மேதை ர. பிரக்ஞானந்தாவுக்கு எதிராக சமன் செய்தார்.

2024 ஆம் ஆண்டில், தனது இரண்டாவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில், சிறப்பு கிராண்டு மாசுட்டர்களான அனிசு கிரி மற்றும் பீட்டர் லீகோவை தோற்கடித்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "44esime Olimpiadi degli scacchi: Chennai 2022" (in Italian). Retrieved 19 August 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 "Olympiad 2024 Italy Team Info" (in English). Retrieved 2 October 2024.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Olimpiadi online: convocazioni Italia" (in Italian). Retrieved 19 August 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Lorenzo a 21 anni diventa Gran maestro di scacchi" (in Italian). 4 October 2021. Retrieved 19 August 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Lorenzo Lodici Campione Italiano 2018!" (in Italian). Retrieved 19 August 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Festival Holiday La Marca - Lodici supera quota 2500 e realizza la 2ª Norma GM! Dal 2/7 WE con Valsecchi" (in Italian). 30 June 2021. Retrieved 19 August 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Lorenzo Lodici Grande Maestro!" (in Italian). Retrieved 19 August 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "44th Olympiad Chennai 2022 Open - Board-prizes". Retrieved 19 August 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோரென்சோ_லோடிசி&oldid=4410801" இலிருந்து மீள்விக்கப்பட்டது