உலோமோனோசோவைட்டு
| உலோமோனோசோவைட்டு Lomonosovite | |
|---|---|
| பொதுவானாவை | |
| வகை | கனிமம் |
| வேதி வாய்பாடு | Na10Ti4(Si2O7)2(PO4)2O4 |
| இனங்காணல் | |
| படிக அமைப்பு | முச்சரிவச்சு |
| பிளப்பு | சரிபிளவு |
| முறிவு | ஒழுங்கற்றது |
| விகுவுத் தன்மை | நொறுங்கும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 3–4 |
| அடர்த்தி | 3.12 – 3.15 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு(−) |
| ஒளிவிலகல் எண் | nα = 1.670 nβ = 1.750 nγ = 1.778 |
| இரட்டை ஒளிவிலகல் | 0.108 |
| 2V கோணம் | 56° |

உலோமோனோசோவைட்டு (Lomonosovite) என்பது Na10Ti4(Si2O7)2(PO4)2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பாசுப்பேட்டு -சிலிக்கேட்டு கனிமமான இது முன்னதாக Na5Ti2(Si2O7)(PO4)O2 அல்லது Na2Ti2Si2O9*Na3PO4 என்ற வாய்ப்பாடுகளாலும் குறிக்கப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் உலோமோனோசோவைட்டு கனிமத்தை Lom[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
நையோபியம் (11.8% Nb2O5 வரை), மாங்கனீசு (4.5 %MnO வரை) மற்றும் இரும்பு (2.8% வரை) ஆகியவை உலோமோனோசோவைட்டு கனிமத்துடன் கலந்து காணப்படுகின்றன.[2]
கண்டுபிடிப்பு
[தொகு]உலோமோனோசோவைட்டு கனிமத்தை லோவோசெர்சுகி அக்பைடிக்கு மலைப்பகுதியில் வி.ஐ. கெராசிமோவ்சுகி என்பவர் கண்டுபிடித்தார்.[3] பிரபல உருசிய கவிஞர், வேதியியலாளர், தத்துவஞானி, சுரங்கப் பொறியாளர் என்று பன்முகங்களுடன் அறியப்படும் மிகைல் லோமோனோசோவின் பெயர் கண்டுபிடிக்கப்பட்ட கனிமத்திற்கு சூட்டப்பட்டது.[4]
கட்டமைப்பு
[தொகு]எக்சு-கதிர் படிகவியல் தரவுகளின்படி, உலோமோனோசோவைட்டு கனிமத்தின் கட்டமைப்பு a = 5.44 Å, b = 7.163 Å, c = 14.83 Å, α = 99°, β = 106°, மற்றும் γ = 90° என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் முச்சரிவச்சு படிக அமைப்பில் உள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.[5] பொதுவாக மையச்சமச்சீர் (sp. gr. P-1) காணப்படும் என்றாலும் மையச்சமச்சீர் அல்லாத வகைகள் (பல்வகை) கூட பதிவாகியுள்ளன.[2]
உலோமோனோசோவைட்டின் படிக அமைப்பு, ஒரு மைய எண்முக O அடுக்கு மற்றும் இரண்டு வெளிப்புற பல்லினபன்முக H அடுக்குகளைக் கொண்ட மூன்று அடுக்கு HOH செருகுதுளைக அடிப்படையாகக் கொண்டுள்ளது. O அடுக்கில் Ti- மற்றும் Na மையப்படுத்தப்பட்ட எண்முகங்கள் வேறுபடுகின்றன. அதேசமயம் H அடுக்குகள் Ti- மையப்படுத்தப்பட்ட எண்முகங்கள் மற்றும் Si2O7 ஈரார்த்தோ குழுக்களால் ஆனவை, (மற்ற பல்லினபைலோசிலிக்கேட்டுகளைப் போல, எடுத்துக்காட்டாக உலாம்பிரோபைலைட்டு). இடைப்பட்ட இடத்தில் Na+ நேர்மின் அயனிகள் மற்றும் PO43- அயனிகள் உள்ளன.[5]
பண்புகள்
[தொகு]உலோமோனோசோவைட்டு சரியான பிளவுகளுடன் செதிளடுக்கு மற்றும் தட்டையான படிகங்களை உருவாக்குகிறது. இலவங்கப்பட்டை-பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாகவும் நுண்ணோக்கி பழுப்பு நிறத்திலும் காணப்படுகிறது. மெல்லிய தட்டுகளாக ஒளிபுகக் கூடியதாகவும் விடாப்பிடியான பளபளப்பும் கொண்டுள்ளது.
உலோமோனோசோவைட்டு கனிமத்தின் பலதிசை வண்ணப்படிகம் நிறமற்றது முதல் பழுப்பு நிறம் வரை வலுவானது. இதன் ஒளிவிலகல் குறியீட்டு எண் = 1.654–1.670 = 1.736 – 1.750 =1.764–1.778 2V=56–69.[6]
3–4 என்ற கடினத்தன்மை மதிப்பும் 3.12 – 3.15 என்ற அடர்த்தி மதிப்பும் உலோமோனோசோவைட்டு கனிமம் வெளிப்படுத்துகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.
- ↑ 2.0 2.1 Rastsvetaeva, Zaitsev, Pekov (2020). "Crystal Structure of Niobium-Rich Lomonosovite with Symmetry P1 from the Khibiny Massif (Kola Peninsula)". Crystallography Reports 65 (3): 22–427. doi:10.1134/S1063774520030268. Bibcode: 2020CryRp..65..422R. https://www.researchgate.net/publication/341480954.
- ↑ Gerasimovskii, V. I.. "Lomonosovite, a new mineral". Dokl. Akad. Nauk SSSR 70.
- ↑ "Maburg. Song of Yu.Lores".
- ↑ 5.0 5.1 Rastsvetaeva, Simonov, Belov (1971). "Crystalline structure of lomonosovite, Na5Ti2[Si2O7][PO4]O2". Dokl. Akad. Nauk SSSR 197 (1): 81–84.
- ↑ 6.0 6.1 பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;:0என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை