உலோப்பசு திறப்பு
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.e4 e5 2.c3 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | C20 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | திறந்த ஆட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏனைய சொற்கள் | மேக்லியாடு தாக்குதல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
சதுரங்க விளையாட்டில் உலோப்பசு திறப்பு (Lopez Opening) என்பது,
1. e4 e5
2. c3
என்ற ஆரம்ப நகர்வுகளுடன் தொடங்குகிறது. இத்தொடக்கம் மேக்லியாடு தாக்குதல் (MacLeod Attack) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்காட்டிசு – கனடிய சதுரங்க விளையாட்டு வீரர் நிக்கோலசு மேக்லியாடு இத்திறப்பை அடிக்கடி விளையாடினார். ஆனால் போட்டிகளில் இத்திறப்பு எப்போதாவதுதான் ஆடப்படுகிறது.
விவாதம்
[தொகு]வெள்ளையின் இரண்டாவது நகர்வு, அடுத்து தன்னுடைய சிப்பாயை d4 என்று ஆடுவதற்கான தயாரிப்பாக அமைந்துள்ளது. இதனால் வலுவான மையம் வெள்ளைக்கு உண்டாகும் நிலை ஏற்படுகிறது. தொடரும் ஆட்டம் மிகவும் கிட்டத்தட்ட பொன்சியானி திறப்பு அல்லது சுகாட்சு ஆட்டத்தில் நிகழும் கோரிங் பலியாட்ட வகை தொடக்கத்திற்கு மாறிவிடுகிறது. இத்தொடக்கம் மிகவும் மெதுவானது என்று எரிக் சிகில்லர் தன்னுடைய, ” வழக்கத்துக்கு மாறான சதுரங்கத் திறப்புகள்” என்னும் நூலில் குறிப்பிடுகிறார். கருப்பு 2...d5! என்ற ஒரு தீவிரமான நகர்வைச் செய்வதன் மூலமாக ஆட்டத்தின் வழிமாறும் போக்குகளை நீக்கி அவருக்கு ஏற்பட்ட தொடக்க பின்னடைவுகளை சரிபடுத்திக் கொள்கிறார். ஆட்டம் 1.e4 e5 2.c3 d5! 3.exd5 Qxd5, என்று தொடர்கிறது. 4.Nc3 என்று விளையாடி இராணியை விரட்டவும் ஒரு உத்வேகம் பெறவும் வெள்ளைக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
இவற்றையும் காண்க
[தொகு]- உருய் உலோப்பசு — ஒரு பிரபலமான சதுரங்கத் திறப்பாட்டம்.
மேற்கோள்கள்
[தொகு]Schiller, Eric (2003). Unorthodox Chess Openings. Cardoza. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58042-072-9.