உள்ளடக்கத்துக்குச் செல்

உலோதிக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலோதிக் கோட்டை (Lodi Fort) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். இந்தக் கோட்டை சத்லச்சு ஆற்றின் கரையில் அமைந்துள்ளதுடன், அருகிலுள்ள பில்லூர் நகரத்திற்குச் செல்லும் ஒரு சுரங்கப்பாதையையும் கொண்டுள்ளது.

வரலாறு

[தொகு]

உலோதிக் கோட்டை 500 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கந்தர் கான் உலோதியின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இரஞ்சித் சிங் மற்றும் அவருக்குப் பிறகு வந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இது நன்கு பராமரிக்கப்பட்டது. ஆனால் பின்னர் பழுதடைந்து சிதைவடைந்தது. டிசம்பர் 2013 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இக்கோட்டை மாநிலத்தால் பாதுகாக்கப்படும் நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.[1][2][3][4][5]

அரசு நெசவு வேதியியல் மற்றும் பின்னல் தொழில்நுட்ப நிறுவனம் ஆரம்பத்தில் கோட்டை வளாகத்தில் அமைந்திருந்தது. தற்போது அது உலூதியானாவில் உள்ள இரிசி நகர், இசட்டு-பிளாக்கு என்ற புதிய முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.[6][7]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Know Your State Punjab (in ஆங்கிலம்). Arihant Publications India limited. 2019-06-04. p. 184. ISBN 978-93-131-6766-2.
  2. The City Skyline of India, 2006: Top 100 Cities to Reside, Earn & Invest in (in ஆங்கிலம்). Indicus Analytics. 2006. p. 85. ISBN 978-81-8015-030-2.
  3. Gyanesh, Aditi (27 September 2014). "Major monuments given a miss on Punjab tourism's website". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-02-12.
  4. "Ripe with history, Ludhiana's Lodi Fort lies forgotten without ASI protection". The Indian Express (in ஆங்கிலம்). 2019-12-31. Retrieved 2021-02-12.
  5. "जिस धरोहर ने दिया शहर को बड़ा नाम, आज वही ढूंढ रही खुद के निशां Ludhiana News". Dainik Jagran (in இந்தி). Retrieved 2021-02-12.
  6. Punjab (India) (1970). Punjab District Gazetteers: Ludhiana. Supplement (in ஆங்கிலம்). Controller of Print. and Stationery. p. 554.
  7. "About Institute – gitcktpolyldh.ac.in" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-02-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோதிக்_கோட்டை&oldid=4424785" இலிருந்து மீள்விக்கப்பட்டது