உலோகப்பூச்சிடுதல்
உலோகப்பூச்சிடுதல் (Metallizing) என்பது உலோகமல்லாத பொருள்களின் புறப்பரப்பின் மீதும் உலோகத்தை பூச்சாக பூசுகின்ற உத்திக்கான பொதுவான பெயராகும்.[1] இப்படிப்பட்ட பூச்சானது பொருள்களை அலங்கரிக்கும் நோக்கத்தையோ, பாதுகாக்கும் நோக்கத்தையோ, செயல்படும் நோக்கத்தையோ கொண்டிருக்கலாம்.
உலோகமல்லாத பொருள்களின் மீது உலோகப்பூச்சிடுதலுக்கான உத்திகள் மற்றும் முறைகள் கண்ணாடி தயாரிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே தொடங்கியுள்ளது. 1835 ஆம் ஆண்டில் ஜஸ்டஸ் வான் லீபிக் என்பவர் ஒரு கண்ணாடியின் புறப்பரப்பில் உலோக நிலை வெள்ளியைப் பூசும் முறையினைக் கண்டறிந்தார். இதர அலோகப் பொருட்களின் மீது உலோகப்பூச்சினைப் பூசும் முறைகள் அக்ரைலோநைட்ரைல் பியூட்டாடையீன் இசுடைரீன் என்ற வகை நெகிழிகளின் வரவிற்குப் பிறகு விரைவான வளர்ச்சியைப் பெற்றது.
வெற்றிடத்தை பயன்படுத்தி உலோகமுலாம் பூசுதல்
[தொகு]காற்றில்லா வெற்றிடத்தில் உலோகமுலாமாக பூசவேண்டிய உலோகத்தை அதன் கொதிநிலைக்கு வெப்பப்படுத்தி எந்த பொருளின் மீது பூசவேண்டுமோ அதன் மீது படியச் செய்து குளிர்விக்கும் முறையாகும்.[2] இந்த முறையானது, ஆலே தொலைநோக்கி போன்ற பெரிய பிரதிபலிப்பு தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகளில் அலுமினியத்தைப் பூச்சாகப் பூசப் பயன்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Definition - What does Metallizing mean?". Corrosionpedia. Retrieved 12 மே 2019.
- ↑ "Vacuum Metalizing". Dunmore. Retrieved 12 மே 2019.