உலெக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலெக்ஸ்

இது ஃபேபேசியே குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரங்களின் வகையைச் சார்ந்தது. இவை புதர்களாக வளரக்கூடிய வறண்ட நிலத் தாவரமாகும். இவற்றில் இருபது வகையான சிற்றினங்கள் உள்ளன. இவை மேற்கு ஐரோப்பா மற்றும் வட மேற்கு ஆப்ரிக்காவில் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றின் இறைகள் முச்சிலை அமைப்பைக் கொண்டிருக்கும். இவை முதிர்ந்த நிலையில் இலைகள் செதில்களாக மாற்றமடைந்து சிறு சிறு பளபளப்பான முட்களாகக் காணப்படும். பூக்கள் அடர் மஞ்சள் நிறமாகக் காணப்படும். பொருளாதார முக்கியத்துவம்: உலெக்ஸ் தாவரத்தின் இலை மொட்டுக்கள் தேயிலைக்கு மாற்றாகப் பயன்படுகிறது. இவற்றின் பூக்கள் தெளிவான மஞ்சள் சாயத்தைக் கொடுக்கின்றன.இவற்றின் இலைகளில் டானின் சேர்மம் உள்ளதால் வயிற்றுப்போக்கு சிகிச்சைக்குப் பயன்படுகிறது. இவற்றின் இலைச்சாற்றை பயிர்களின் மேல் தெளிக்கும்போது இயற்கையான பூச்சி விரட்டியாகப் பயன்படுகிறது. மேலும் கால்நடைகளுக்கு எந்தவித தீங்கும் ஏற்படுத்துவதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலெக்ஸ்&oldid=2322508" இருந்து மீள்விக்கப்பட்டது