உலூயிசு பிராக்டர்
உலூயிசு பிராக்டர் Louise Prockter | |
---|---|
துறை | கோள் நிலவியல் புவியியற்பியல் தொலைமுறை உணர்தல் |
பணியிடங்கள் | ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழக பயன்முறை இயற்பியல் ஆய்வகம் பல்கலைகழகங்களின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் நிலா, கோள் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | இலங்காசுட்டர் பல்கலைக்கழகம் பிரவுன் பல்கலைக்கழகம்]] |
உலூயிசு பிராக்டர் (Louise Prockter) ஓர் பிரித்தானிய-அமெரிக்கக் கோள் அறிவியலளர் ஆவார். இவர் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழக பயன்முறை இயற்பியல் ஆய்வகத்தின் கோள் தேட்டக் குழுவின் முன்னாள் மேற்பார்வையாளர் ஆவார்.[1] இவரை 2016 இல் பல்கலைகழகங்களின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் டெக்சாசில் அமைந்த அவுசுட்டனில் உள்ள நிலா, கோள் நிறுவனத்தின் இயக்குநராக அறிவித்தது. இப்பணியில் இவர் 2016 செப்டம்பர் 6 முதல் சேர்ந்தார்.[2] இவர் தான் நிலா, கோள் நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநர் ஆவார். இவர் 2002 முதல் 2016 வரை நிலா, கோள் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த சுட்டீவன் ஜே. மாக்வெல்லுக்குப் பிறகு இப்பதவியை ஏற்றார்.
கல்வி
[தொகு]இவர் தன் இளவல் பட்டத்தை இங்கிலாந்தில் உள்ள இலங்காசுட்டர் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் தன் முதுவர் பட்டத்தை பிரவுன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் 1999 இல் தன் முனைவர் பட்டத்தை கோள் நிலவியலில் பெற்றார்.
வாழ்க்கைப்பணி
[தொகு]பிராக்டர் நாசாவின் இலக்குத் திட்டங்களில் நேர்டியாகவும் மறைமுகமாகவும் பணிசெய்துள்ளார். இவர் கலீலியோ விண்கலப் பட்ம்பிடிப்புக் குழுவிலும் ஐரோப்பா இலக்குத் திட்டத்திலும், புவியண்மைக் குறுங்கோள் சுற்றிவரல் இலக்குத் திட்டத்திலும், அறிவர் மேற்பரப்பு, விண்வெளிச் சூழல், புவி வேதியியல், தொலைவறிதல் (மெசெஞ்சர்-MESSENGER) இலக்குத் திட்டத்திலும் அறிவன் கோள் பயண இலக்குத் திட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார். மெசெஞ்சர் இலக்குத் திட்டத்தில், இவர் இணைத் திட்ட அறிவியலாளராகவும் இணை ஆய்வாளராகவும் அறிவன் கோள் இருபுறப் படப்பிடிப்பு அமைப்பின் கருவி அறிவியலாளராகவும் பணிசெய்துள்ளார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NASA Solar System Exploration Profile: Louise Prockter". nasa.gov. Archived from the original on 2013-09-21.
- ↑ "USRA Names Louise M. Prockter Director of the Lunar and Planetary Institute". www.lpi.usra.edu.
- ↑ "Louise Prockter: Be Tenacious". wordpress.com. 2 September 2010.