உலூனா 11
stamp | |
திட்ட வகை | நிலா சுற்றுகலன் |
---|---|
இயக்குபவர் | GSMZ Lavochkin |
காஸ்பார் குறியீடு | 1966-078A |
சாட்காட் இல. | 02406 |
திட்டக் காலம் | 38 நாட்கள் |
விண்கலத்தின் பண்புகள் | |
விண்கல வகை | E-6LF |
தயாரிப்பு | GSMZ Lavochkin |
ஏவல் திணிவு | 1640 கிகி[1] |
உலர் நிறை | 1136 கிகி |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 24 ஆகத்து 1966, 08:03:21 ஒபொநே[1] |
ஏவுகலன் | மோல்நியா-எம் 8K78M |
ஏவலிடம் | பைக்கோனூர், களம் 31/6 |
ஒப்பந்தக்காரர் | TsSKB-Progress |
திட்ட முடிவு | |
கடைசித் தொடர்பு | அக்தோபர் 1966 |
தேய்வு நாள் | 1966 இறுதியில் அல்லது 1967 இன் தொடக்கத்தில் |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
Reference system | நிலாமைய |
அண்மைநிலா | 1898 கிமீ |
கவர்ச்சிநிலா | 2931 கிமீ |
சாய்வு | 27° |
சுற்றுக்காலம் | 178 மணித்துளிகள் |
Epoch | 27 ஆகத்து 1966 [2] |
Invalid value for parameter "type" | |
Invalid parameter | 27 ஆகத்து 1966, 21:49 GMT |
Orbits | 277 |
கருவிகள் | |
நிலாவைப் படமெடுக்கும் படிமாக்க அமைப்பு Gamma-ray spectrometer Magnetometer Radiation detectors Infrared radiometer Meteoroid detector R-1 transmission experiment |
உலூனா 11 (ஈ - 6LF தொடர்) (Luna 11 (E-6LF series)) என்பது சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டத்தின் ஆளில்லா விண்வெளி பயணமாகும். இது உலூனிக் 11 என்றும் அழைக்கப்பட்டது. உலூனா 11 புவியைச் சுற்றி வரும் மேடையில் இருந்து நிலாவை நோக்கி ஏவப்பட்டு 1966 ஆகத்து 27 அன்று நிலா வட்டணையில் நுழைந்தது.
கண்ணோட்டம்
[தொகு]பணியின் நோக்கங்களாக பின்வரும் ஆய்வுகள் அடங்கும்.
- நிலாவின் வேதியியல் உட்கூறைத் தீர்மானிக்க நிலா காமா மற்றும் எக்சுக்கதிர் உமிழ்வுகள்
- நிலா ஈர்ப்பு பிறழ்வுகள
- நிலாவுக்கு அருகில் உள்ள விண்கல் பாய்வோடைகளின் செறிவு
- நிலாவுக்கு அருகில் உள்ள வன் துகள் கதிர்வீச்சின் செறிவு.
அக்டோபர் 1,1966 அன்று மின்கலங்கள் செயலிழப்பதற்கு முன்பு 137 வானொலி தொடர்புகளும் நிலாவின் 277 வட்டணைகளும் நிறைவடைந்தன.
இரண்டாம் தலைமுறை உலூனா விண்கலத்தின் இந்தத் துணைக்குழுவான E - 6LF நிலா வட்டணையில் இருந்து நிலா மேற்பரப்பின் முதல் புகைப்படங்களை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நோக்கம் நிலாப் பொருண்மைச் செறிவுகள் பற்றிய தரவுகளைப் பெறுவதாகும் , இது முதன்முதலில் உலூனா 10 ஆல் கண்டறியப்பட்டது. யே - 6 கலத்தைப் பயன்படுத்தி அறிவியல் கருவிகளின் தொகுப்பு (மேலும் சோண்டு 3 இல் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற ஒரு படிமமாக்க அமைப்பு) மென்மையான தரையிறங்கும் விமானங்களில் பயன்படுத்தப்படும் சிறிய இறங்குகலத்துக்குப் பதிலாக மாற்றப்பட்டது. புகைப்படங்களின் பிரிதிறன் 15 முதல் 20 மீட்டர் ஆகும். சூரியக் கதிர்வீச்சு காரணமாக படத்திற்கு ஏற்படும் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க , நிலா வட்டணையின் முதல் 24 மணி நேரத்திற்குள் அனைத்து புகைப்படங்களையும் எடுக்க திட்டமிடப்பட்டது. எதிர்கால நிலா ஊர்திக்கான செய்முறையாக வெற்றிடத்தில் பல்லிணைமாற்றச் செயல்திறனை ஆயும் ஒரு தொழில்நுட்பச் செய்முறையும் இதில் அடங்கும்.
1966 ஆகத்து 27 அன்று 21:49 கிரீன்விச் மணிக்கு அமெரிக்க நிலாவட்டணையில் நுழைந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு உலூனா 11 ஏவப்பட்டது. வட்டணை அளவுருக்கள் 160 x 1193 கிலோமீட்டர்கள் ஆகும். பயணத்தின் போது , தொலைக்காட்சி ஒளிப்படக் கருவி பயன்படுத்தக்கூடிய படங்களைத் திருப்பித் தரத் தவறிவிட்டது , ஏனெனில், ஒரு அயற் பொருள் திசைவைப்புக் கட்டுப்பாட்டு பொறிகளில் ஒரு கூம்புகுழலில் அடைத்ததால் விண்கலம் நிலா மேற்பரப்பை அடையும் சரியான திசைவைப்பை வைக்க முடியாமல் போனது. மின்சாரம் தீர்ந்த பின்னர், 1966 அக்டோபர் 1 அன்று பணி முறையாக முடிவடைவதற்கு முன்பு வரை மற்ற கருவிகள் தவறு இல்லாமல் செயல்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Siddiqi, Asif (2018). Beyond Earth: A Chronicle of Deep Space Exploration, 1958–2016 (PDF) (second ed.). NASA History Program Office.
- ↑ "NASA - NSSDCA - Spacecraft - Trajectory Details". nssdc.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-05-02.