உள்ளடக்கத்துக்குச் செல்

உலு கிள்ளான்

ஆள்கூறுகள்: 3°10′44″N 101°46′3″E / 3.17889°N 101.76750°E / 3.17889; 101.76750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலு கிள்ளான்
Ulu Kelang
சிலாங்கூர்
கோம்பாக் மாவட்டத்தில் உலு கிள்ளான்
கோம்பாக் மாவட்டத்தில் உலு கிள்ளான்
Map
ஆள்கூறுகள்: 3°10′44″N 101°46′3″E / 3.17889°N 101.76750°E / 3.17889; 101.76750
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கோம்பாக்
நகராட்சி1 சூலை 1992
பரப்பளவு
 • மொத்தம்16.94 km2 (6.54 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
68000
மலேசிய தொலைபேசி எண்+60-3-42, +60-3-41, +60-3-92

உலு கிள்ளான் (ஆங்கிலம்: Ulu Kelang அல்லது Ulu Klang; மலாய்: Mukim Ulu Kelang) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டத்தில் (Gombak District) அமைந்துள்ள ஒரு முக்கிம்; மற்றும் ஒரு மாநகர்ப்பகுதி ஆகும். இது அம்பாங் ஜெயா நகராட்சியால் (Majlis Perbandaran Ampang Jaya) நிர்வகிக்கப்படும் ஐந்து மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

புவியியல்

[தொகு]

உலு கிள்ளான் முக்கிம் பகுதி 16.94 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. கோலாலம்பூரின் வடகிழக்கில் அமைந்துள்ள இந்தப் பகுதியின் மேற்பரப்பு ஒப்பீட்டளவில் சற்றே உயரமானது. கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்தில் உள்ளது; மேலும் இங்குள்ள நிலப்பரப்பானது மேட்டு நிலம், தாழ்நிலம் அல்லது சமச்சீர் அற்ற நிலமாகும்.

இதன் விளைவாக, உலு கிள்ளான் பகுதி கிள்ளான் ஆற்றுக்கான மழை நீர்ப்பிடிப்புப் பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியின் உயரமான இடங்களில் புக்கிட் அந்தாராபங்சா, புக்கிட் கெமென்சா மற்றும் புக்கிட் பெலாக்கான் ஆகியவை அடங்கும்.

நிலச்சரிவுகள்

[தொகு]

இங்குள்ள குன்றுகளும் மலைகளும் சுண்ணாம்புக் கற்களால் ஆனவை. சுண்ணாம்புக் குன்றுகள் உடையக்கூடியவை மற்றும் கனமழையின் போது கரையும் தன்மை கொண்டவை. இதன் விளைவாக கடந்த காலங்களில், இந்த பகுதிகளில் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றின் காரணமாக; அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசித்த மக்களும், மலைப்பகுதியில் உள்ள வீடுகளில் வசித்த மக்களில் சிலரும் தங்களின் இருப்பிடங்களைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

1993-ஆம் ஆண்டு ஐலேண்டு கோபுரம் இடிந்து விழுந்த துர்நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.[1][2] அதன் பின்னர், பல இடங்களில் கிள்ளான் ஆற்றின் நீரோட்டம் நேராக்கப்பட்டது. இதனால் ஆற்று நீர் வேகமாகப் பாய்த் தொடங்கியது. இதன் காரணமாக சூன் 10, 2007 அன்று கோலாலம்பூர் மாநகரம் பெரிய அளவிலான திடீர் வெள்ளத்தை எதிர்கொண்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1993: Highland Towers Collapse". Learning from Building Failures (in ஆங்கிலம்). 1993-02-06. Retrieved 2020-10-06.
  2. AFIQAH (December 11, 2018). "26 Years On: The Day The Highland Tower Collapsed". Rojak Daily.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலு_கிள்ளான்&oldid=4382518" இலிருந்து மீள்விக்கப்பட்டது