உலு இலங்காத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலு இலங்காத் மாவட்டம் (Hulu Langat District) மலேசியாவின் கோலாலம்பூருக்கும் நெகேரி செம்பிலனுக்கும் இடையில் சிலாங்கூரின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள மாவட்டமாகும்.

2010 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி (தற்காலிக முடிவு) இந்த மாவட்டம் 840 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும், 1,141,880 மக்கட் தொகையையும் கொண்டுள்ளது. உலு இலங்காத் மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்தாவது பெரிய மாவட்டம் ஆகும். இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடியேற்றங்களின் கலவையாக காணப்படுகின்றது. பெரும்பான்மையான மக்கள் கோலாலம்பூருக்கு அருகிலுள்ள நகரங்களில் குடியேறுகின்றனர். சேரஸ், ஆம்பாங் போன்ற மக்கட் தொகை மையங்கள் பெருநகரப் பகுதிகளின் புறநகர்ப் பகுதிகளாக மாறின. சேரஸ் மற்றும் அம்பாங் இரண்டும் இப்போது கோலாலம்பூர் கூட்டாட்சி பிராந்தியத்திற்கும் சிலாங்கூர் மாநிலத்திற்கும் இடையில் நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி மாநில மற்றும் தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது உலு இலங்காத் மாவட்டம் வறுமை விகிதம் அதிகமாக உள்ள மாவட்டம் ஆகும்.[1]

சனத்தொகை[தொகு]

மலேசியாவின் சனத்தொகை மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பின் படி, உலு இலங்காத் மாவட்டத்தில் 1980 ஆம் ஆண்டில் 177,900 மக்களும், 1991 ஆம் ஆண்டில் 413,900 மக்களும், 2000 ஆம் ஆண்டில் 864,451 மக்களும் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டது. மேலும் 2010 ஆம் ஆண்டில் சனத்தொகை வெளிநாட்டவர்களைத் தவிர்த்து 1,067,744 ஆக அதிகரித்துள்ளது.[சான்று தேவை]

2010 ஆம் ஆண்டின் மலேசிய சனத்தொகை கணக்கெடுப்பின் படி பூமிபுத்ரா இனக் குழுவினர் 52.1% வீதமும், மலேசிய சீனர்கள் 33.3% வீதமும், மலேசிய இந்தியர்கள் 10.7% வீதமும், ஏனைய இனக் குழுவினர் 1.0% வீதமும் வாழ்கின்றனர்.[2]

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

உலு இலங்காத் மாவட்டம் 7 முகிம்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன உலு இலங்காத், அம்பார், சேரர், உலு செமனி, காஜாங், செமனி, பிரானங் என்பனவாகும்.[3]

உள்ளூர் பகுதி அரசு[தொகு]

அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம்

கஜாங் நகராட்சி மன்றம்

உள்கட்டமைப்புகள்[தொகு]

பொது போக்குவரத்து[தொகு]

இந்த மாவட்டத்தின் வழியாக சமீபத்தில் திறக்கப்பட்ட எம்ஆர்டி சுங்கை புலோ-கஜாங் லைன் பகுதிகள் இயங்குகின்றன. இதற்கு முன்பு எந்த தொடருந்து சேவையும் சேவை வழங்கவில்லை.

நெடுஞ்சாலைகள்[தொகு]

இந்த தொகுதியில் கோலாலம்பூர்-செரம்பன் அதிவேக நெடுஞ்சாலை, சேரஸ்-கஜாங் அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கஜாங் அதிவேக நெடுஞ்சாலை (சில்க் நெடுஞ்சாலை) என்பன பிற முக்கிய நெடுஞ்சாலைகளுக்கு அத்தியாவசிய இணைப்புகளுடன் சேவை செய்கின்றன.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

உலு இலங்காத் நகரம் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காகவும், இயற்கை சூழல்களுக்காகவும் விரும்பப்படுகின்றது. கோலாலம்பூர் நகருக்கு அருகில் இருப்பதால் உலு இலங்காத் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான பிரபலமான இடமாகும். சுற்றுச்சூழல் சுற்றுலாவின் பிரபலமான இடங்களில் சுங்கை கபாய் நீர்வீழ்ச்சி , செமெனீ நீர் நீர்த்தேக்கம் மற்றும் காங்காக் நதி வன பொழுதுபோக்கு மையம் ஆகியவை அடங்கும்.

லெம்பா பாங்சூன் அருகே மவுண்ட் நுவாங்(1,483 மீ) நடைபயணிகள் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு கினாபாலு மலையை ஏறும் முன் அல்லது மராத்தான் செய்வதற்கு முன்பு ஒரு பயிற்சி மைதானம் அமைந்துள்ளது. பாலகாங்கில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அடிக்கடி வரும் பல்வேறு வணிக வளாகங்கள் அமைந்துள்ளன.

சான்றுகள்[தொகு]