உள்ளடக்கத்துக்குச் செல்

உலுவத்து கோவில்

ஆள்கூறுகள்: 8°49′44″S 115°5′7″E / 8.82889°S 115.08528°E / -8.82889; 115.08528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலுவத்து கோயில்
Uluwatu Temple
உலுவத்து கோவில் is located in Badung Regency
உலுவத்து கோவில்
பாதுங்கில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தோனேசியா
மாநிலம்:பாலி
மாவட்டம்:தெற்கு குட்டா
அமைவு:உலுவத்து
ஆள்கூறுகள்:8°49′44″S 115°5′7″E / 8.82889°S 115.08528°E / -8.82889; 115.08528
கோயில் தகவல்கள்

உலுவாட்டு கோயில் (Uluwatu Temple) இந்தோனேசியாவில் உள்ள பாலி மாகாணத்தில் உள்ள பாடுங்கில், சௌத் கூடாவில் உள்ள உலுவாட்டு என்னும் இடத்தில் அமைந்துள்ள பாலி இந்து சமயக் கோயிலாகும். இக்கோயில் உருத்திரனின் மறுவடிவமாகக் கருதப்படுகின்ற அசிந்தியன் என்னும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

வரலாறு மற்றும் சொல்லியல்[தொகு]

இக் கோயில் 70-மீட்டர்-high (230 அடி) உயரமுள்ள குன்று அல்லது பாறையின் விளிம்பில் கட்டப்பட்டுள்ளது. அவ்விடம் கடலை நோக்கிய வகையில் உள்ளது.[1]   நாட்டுப்புற கதைகளில், இந்த பாறை தேவி டானு எனப்படுகின்ற கடல் பெண் தெய்வத்தின் பாடம் செய்யப்பட்ட படகின் ஒரு கூறாகக் கூறப்படுகிறது.

ஒரு சிறிய கோயில் முன்பு இருந்ததாகக் கூறப்பட்டாலும், இந்த அமைப்பு 11 ஆம் நூற்றாண்டில் எம்பூ குதுரான் என்ற ஜாவானிய முனிவரால் கணிசமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. கிழக்கு ஜாவாவைச் சேர்ந்த மற்றொரு முனிவரான டாங்யாங் நிரார்த்தா இங்குள்ள வெற்று சிம்மாசனம் எனப்படுகின்ற பத்மாசன சன்னதிகளைக் கட்டியதற்காகப் பாராட்டப்படுகிறார் அவர் இங்கு மோட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. மோட்சம் பெறும் நிகழ்வினை உள்ளுரில் மேலே செல்லுதல் என்று கூறுவர். இதன் விளைவாக கோயிலோடு தொடர்புடைய சொல்லாடல் லுஹூர் என்ற அளவில் அமைந்துள்ளது.[2]

குரங்குகள்[தொகு]

திருடப்பட்ட ஒரு ஜோடி சன்கிளாஸை வைத்திருக்கும் குரங்கு
சுற்றுலாப் பயணிகளின் பொருள்களைத் திருடும் குரங்கு

இந்த கோயிலில் அதிக எண்ணிக்கையிலான குரங்குகள் ( மக்காக்கா பாசிக்குலரிஸ் ) வசிக்கின்றன, அவை பார்வையாளர்களின் உடைமைகளை பறித்துச் சென்று விடுகின்றன. பழத்திற்கான விரும்பி அவை பொருள்களைப் பெற விரும்புவதை வழக்கமாகக் கொண்டிரந்தாலும், திருட்டு முயற்சியில் மட்டுமே அவை இறங்குகின்றன.

இப்பகுதியில் உள்ள மாகாக் குரங்குகளின் நடத்தையைப் பற்றி அறிவியலாளர்கள் மற்றும் வல்லுநர்கள் ஆய்வுகள் நடத்தியுள்ளனர். அவர்களுடைய ஆய்வின் மூலமாக அவர்கள் இந்தக் குரங்குகள் பண்டமாற்று முறையினைக் கற்றுக் கொள்வதாகக் கூறும் தரவுகளை சேகரித்துள்ளனர். இந்த வர்த்தகம் இதன் மூலமாக இளம் சந்ததியினருக்கு அனுப்பப்படுகிறது. இப்பகுதிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மக்காக் குரங்குகளின் புதிய குழுக்கள் விரைவாக அந்தப் பகுதியை தமக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்வதோடு, உள்ளூர் மக்களிடமிருந்து புதிய திறமையைக் கற்றுக்கொள்கின்றன.

கெச்சக் நடன நிகழ்ச்சி[தொகு]

பாலியில் உலுவாட்டுவில் நிகழ்த்தப்பெறுகின்ற கெச்சக் நடன நிகழ்ச்சி

கெச்சக் நடன நிகழ்ச்சி 1930களில் அறிமுகமான ஒருவகையான நடன நிகழ்ச்சியாகும். இந்த நடனம் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமையும். உலுவாட்டு கோயிலில் தினமும் மாலை 6.00 மணி அளவில் இந்த நிகழ்ச்சியானது குன்றின் பக்கத்தில் உலுவாட்டு கோயிலில் நிகழ்த்தப்படுகிறது. வெளிப்புறத்தில் நடத்தப்படுகின்ற நிகழ்ச்சியானது, அழகான சூரிய மறைவுப் பின்னணியில் காண்போரைக் கவரும் வகையில் அமைந்திருக்கும்.

கெச்சக் நடன நிகழ்ச்சி ஒரு வகையான சாமியாடும் நிகழ்ச்சி என்று கூறலாம். ஆண்கள் பாடப்பாட அருள் வந்து சாமியாடல் இங்கு நிகழ்கிறது. 1930களில் பாலியில் வசித்து வந்தபோது, ஒரு செருமனிய ஓவியரும் இசைக்கலைஞருமான வால்டர் இசுப்பைசு என்பவர் இந்த சடங்கை ஆரம்பித்தார். அவர் இதனை ஒரு நாடகமாக மாற்றி அமைத்தார். நாடகத்திற்குக் கருவாக அவர் இராமாயணத்தை எடுத்துக்கொண்டார். அதன் அடிப்படையிலேயே இந்த நாடகம் அமைந்தது. இந்த நாடகத்தை அவர் மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பிப்பதற்காக எடுத்தார். வால்டர் ஸ்பைஸ் இந்தோனேசிய நடனக் கலைஞரான வயான் லிம்பக் என்பவருடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நடனக்கலைஞர் இந்த நாடகத்தை பாலினிய குழுக்களுடன் இணைந்து உலக அளவில் நடத்த ஏற்பாடு செய்து பிரபலப்படுத்திய பெருமையினைப் பெற்றார். அதன் மூலமாக இதனைப் பற்றி உலகளாவிய அளவில் அனைவரும் அறிய ஆரம்பித்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Etymology and description".
  2. Davison, Julian (1999). Balinese Temples. Periplus Editions (HK) Limited. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-962-593-196-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலுவத்து_கோவில்&oldid=3680078" இலிருந்து மீள்விக்கப்பட்டது