உலுரூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆள்கூறுகள்: 25°20′42″S 131°02′10″E / 25.34500°S 131.03611°E / -25.34500; 131.03611
ஊலுரூ
Uluru (Uluṟu)
ஏயர்ஸ் குன்று
Uluru (Helicopter view)-crop.jpg
ஊலுரூ மலை
நாடு  ஆத்திரேலியா
மாநிலம் வடக்கு ஆத்திரேலியா
உயரம் 863 மீ (2,831 அடி)
Prominence 348 மீ (1,142 அடி)
ஆள்கூறு 25°20′42″S 131°02′10″E / 25.34500°S 131.03611°E / -25.34500; 131.03611
Geology களிம நுண்பொடி பாறை
Orogeny பீட்டர்மான்
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களம்
Name Uluṟu – Kata Tjuṯa National Park
Year 1987 (#11)
Number 447
Criteria v,vi,vii,ix
ஆத்திரேலியாவில் அமைவிடம்
ஆத்திரேலியாவில் அமைவிடம்
Locator Red.svg
ஆத்திரேலியாவில் அமைவிடம்
விக்கிமீடியா பொது: Uluru
Website: www.environment.gov.au/...

உலுரூ அல்லது உலுரு (Uluru, English: /ˌlˈr/), அல்லது ஆயர்சு பாறை, Ayers Rock, அதிகாரபூர்வமாக உலுரூ / ஏயர்சு பாறை)[1] என்பது ஆஸ்திரேலியாவின் மத்திய பகுதியில், வட ஆட்புல ஆட்சிப் பகுதியின் தெற்கே அமைந்துள்ள ஒரு பெரும் மணற்கல் பாறையைக் குறிக்கும். இது அலிசு ஸ்ப்றிங்சு நகரில் இருந்து தென்மேற்கே 450 கிமீ (280 மைல்) தூரத்தில் உள்ளது. ஊலூறு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இடத்திற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியைப் போல தட்ப வெப்ப நிலைக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் குன்று இது. இதனால் இது பச்சோந்திக் குன்று என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் வாழும் அனங்கு இன பழங்குடிகளுக்கு உலுறு ஒரு புனிதமான இடமாகக் கொள்ளப்படுகிறது. முழுவதும் மணற்பாறைகள் மற்றும் சிறு சிறு கற்களால் உருவான பாறைகளால் ஆனது இக்குன்று. முட்டை வடிவம் கொண்ட இப்பாறையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் மிகப் பழமையான பழைய ஓவியங்களும் செதுக்கப்பட்ட சில உருவங்களும் உள்ளன.

ஏயர்சு குன்று உலகிலேயே தனிக் குன்றாக இருக்கும் மிகப் பெரிய பாறைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 338 மீட்டர் உயரமும் அடிப்பாகத்தில் 10 கி.மீ அகலமும் கொண்டது.

ஏயர்சு பாறை-சூரியன் மறையும் போது

பச்சோந்திக் குன்று 1873-ல் டபிள்யு. ஜி. கோஸி என்ற ஒரு ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஹென்றி ஏயர்சு என்பவர் ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்ததால் அவர் பெயரால் இந்தக் குன்று 'ஏயர்ஸ் பாறை' என அழைக்கப்பட்டது. உண்மையில் இந்தப் பாறை சிவப்பு நிறம் கொண்டதாகும். சூரிய உதயத்தின் போதும், மறைவின் போதும் இதன் நிறம் மாறுகிறது. சூரியன் உதிக்கும்போது அதன் கிரணங்கள் இதில் பட்டு ஊதா மற்றும் அடர்ந்த சிவப்பு நிறத்தில் தக தக என எரிவது போல் தோற்றமளிக்கும். இதேபோல், சூரியன் மறையும் போது ஊதா நிறம் இதில் படிந்திருப்பதைப் பார்க்கலாம். காலையிலிருந்து மாலை வரை சூரியனின் வெப்பநிலை மாற மாற இதன் நிறங்களும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா என மாறிக் கொண்டே இருக்கும்.

இந்தப் பாறைக்கு அருகில் மவுன்ட் ஓல்கா தேசியப் பூங்காவை ஆஸ்திரேலிய அரசு அமைத்துள்ளது. இந்தப் பாறையையும், பூங்காவில் உள்ள கங்காரு, பன்டிகூட்ஸ் போன்ற பல அரிய விலங்குகளையும் காண உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர். இது ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் தலமுமாகும்.

மலை ஏற்றம்[தொகு]

1983 டிசம்பர் 11 அன்று, ஆத்திரேலியப் பிரதமர் பாப் ஹாக், உலுரூ நிலத்தின் உரிமையை அனங்கு பாரம்பரியப் பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்குத் திருப்பித் தருவதாக உறுதியளித்தார், அத்துடன், உலுரு மலையில் சுற்றுலாப் பயணிகள் ஏறுவதைத் தடைசெய்ய சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட 10 அம்சத் திட்டத்திற்கும் ஒப்புக் கொண்டார். எவ்வாறாயினும், 1985 அக்டோபர் 26 அன்று அதிகாரப்பூர்வமாக அனங்கு மக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் நிபந்தனைகள் வழங்கப்பட்டதால், முன்னர் 50 ஆண்டு குத்தகைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டதற்கு பதிலாக, உலுரு மலையில் ஏற 99 ஆண்டு குத்தகைக்கு அரசாங்கம் அணுகலை அனுமதித்தது.[2][3]

உள்ளூர் அனங்கு மக்கள் உலுருவின் பாரம்பரிய ஆன்மீக முக்கியத்துவம் கருதி மலையில் ஏறுவதில்லை. சுற்றுலாப் பயணிகளையும் பாறையில் ஏற வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொள்வார்கள். வழிகாட்டி பயணிகளிடம் "ஏறுவது தடைசெய்யப்படவில்லை, ஆனால் நாங்கள் விரும்புகிறோம், அனங்கு நிலத்தில் ஒரு விருந்தினராக, நீங்கள் ஏறாமல் எங்கள் சட்டத்தையும் பண்பாட்டையும் மதிக்க தேர்வு செய்யுங்கள்" எனக் கூறுவார்.[4]

2010 இல் உலுருவின் மேல் துகிலுரி நடனம், குழிப்பந்தாட்டம், நிர்வாணம் உட்படப் பல சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் இடம்பெற்றதை அடுத்து, மலை மே ஏறுவதைத் தடை செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட அழைப்புகளுக்கு வழிவகுத்தது.[5][6] 2017 நவம்பர் 1 அன்று, உலுருவின் மேல் ஏறுவதற்கு உலுரு-கட்டா சுட்டா தேசிய வன வாரியம் ஒருமனதாக வாக்களித்தது. இந்த தடை 2019 அக்டோபர் 26 முதல் நடைமுறைக்கு வந்தது.[7][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Place Names Register Extract: Uluru / Ayers Rock". Northern Territory Place Names Register. Northern Territory Government. 6 November 2002. 12 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. Toyne, Phillip; Vachon, Daniel (1984). Growing Up the Country: The Pitjantjatjara Struggle for Their Land. Fitzroy, Victoria: McPhee Gribble. பக். 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-007641-7. இணையக் கணினி நூலக மையம்:12611425. 
  3. Swallow, Julian (26 October 2010). "On this day: Aboriginal Australians get Uluru back". Australian Geographic. Archived from the original on 27 ஆகஸ்ட் 2017. https://web.archive.org/web/20170827125740/http://www.australiangeographic.com.au/blogs/on-this-day/2010/10/on-this-day-aboriginal-australians-get-uluru-back. பார்த்த நாள்: 27 August 2017. 
  4. Welcome to Aboriginal land: Uluṟu–Kata Tjuṯa National Park – Visitor guide and maps. Canberra: Australian Department of the Environment and Water Resources. October 2005. இணையக் கணினி நூலக மையம்:754614279. Archived from the original on 30 October 2008. https://web.archive.org/web/20081030134047/http://www.environment.gov.au/parks/publications/uluru/pubs/visitor-guide.pdf. பார்த்த நாள்: 3 April 2007. 
  5. "Rock rage rolls on". Northern Territory News. 30 June 2010. Archived from the original on 29 ஆகஸ்ட் 2012. https://web.archive.org/web/20120829182700/http://www.ntnews.com.au/article/2010/06/30/159961_ntnews.html. பார்த்த நாள்: 28 February 2011. 
  6. Shears, Richard (28 June 2010). "Stripper sparks fury among Aboriginals after YouTube exotic dance on sacred Ayers Rock". Daily Mail. http://www.dailymail.co.uk/news/worldnews/article-1290180/French-exotic-dancer-Miss-Alizee-Sery-angers-Aboriginals-stripping-Ayers-Rock.html. பார்த்த நாள்: 1 March 2011. 
  7. Hitch, Georgia; Hose, Nick (1 November 2017). "Uluru climbs banned from October 2019 after unanimous board decision to 'close the playground'". ABC News. http://www.abc.net.au/news/2017-11-01/uluru-climbs-banned-after-unanimous-board-decision/9103512. பார்த்த நாள்: 1 November 2017. 
  8. Terzon, Emilia (25 June 2019). "Uluru visitor rush ahead of climbing ban prompts fears for local tourism". ABC Online. https://www.abc.net.au/news/2019-06-25/uluru-climb-closure-prompts-local-tourism-fears/11242554. பார்த்த நாள்: 21 October 2019. 
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Welcome to Country. 17 October 2018. Archived from the original on 25 அக்டோபர் 2019. https://web.archive.org/web/20191025235657/https://www.welcometocountry.org/numbers-of-tourists-climbing-uluru-skyrockets/. பார்த்த நாள்: 21 October 2019. 
  • நாளை நமதே. 'சென்னை நம்ம சென்னை' இதழின் பங்களிப்பு . மாணவர் வழிகாட்டி இலவச மாத இதழ். கிழக்குப் பதிப்பகம்.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலுரூ&oldid=3479304" இருந்து மீள்விக்கப்பட்டது