உலுன் தானு பத்தூர் கோயில்
உலுன் தானு பத்தூர் கோயில் Pura Ulun Danu Batur | |
---|---|
![]() உலுன் தானு பத்தூர் கோயில் நுழைவாயில் | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | பாலி கோயில் |
கட்டிடக்கலை பாணி | பாலி கட்டிடக்கலை |
முகவரி | கிந்தாமணி சாலை, தெற்கு பத்தூர், பாங்கிலி, பாலி 80652 |
ஆள்கூற்று | 8°15′17″S 115°20′09″E / 8.254719°S 115.335851°E |
உயரம் | 1,459 மீட்டர்கள் (4,787 அடி) |
கட்டுமான ஆரம்பம் | 17-ஆம் நூற்றாண்டு |
இடமாற்றம் செய்யப்பட்டது | 1926 |
உலுன் தானு பத்தூர் கோயில் (ஆங்கிலம்: Pura Ulun Danu Batur; Pura Batur; பாலினியம்; இந்தோனேசியம்: Pura Ulun Danu) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் உள்ள ஓர் இந்து பாலி கோயில் ஆகும். பாலி தீவின் மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாக அறியப்படும் இந்தக் கோயில், பாலி தீவின் நல்லிணக்கத்தையும் உறுதித் தன்மையையும் பேணி வருவதாக நம்பப்படுகிறது.
உலுன் தானு பத்தூர் கோயில், பாலி மக்களின் சமய நம்பிக்கையில் வடக்குத் திசையைக் குறிக்கிறது; மேலும் இந்தக் கோயில், விஷ்ணு .கடவுளாருக்கும்; பாலியின் மிகப்பெரிய ஏரியான பத்தூர் ஏரியின் உள்ளூர் தெய்வமான தேவி தானுவிற்கும் கட்டபட்டுள்ளது.
அசல் கோயில் வளாகம் 1926-ஆம் ஆண்டு பத்தூர் எரிமலை வெடிப்பினால் அழிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்தக் கோயில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. 2012-ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாகப் பட்டியலிடப்பட்டது.[1]
பொது
[தொகு]பத்தூர் கிராமம் பத்தூர் மலையின், எரிமலைப் பெருவாய் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக் கிராமம் மூன்று நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பத்தூர் உத்தாரா (வடக்கு); பத்தூர் தெங்கா (நடுப்பகுதி); மற்றும் பத்தூர் செலாத்தான் (தெற்கு) என மூன்று பிரிவுகள் உள்ளன. கிராமவாசிகளில் பெரும்பாலோர் உழவர்கள், கைவினைஞர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள்; மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்தவர்கள் ஆவார்கள்.[2]
வரலாறு
[தொகு]
புரா பத்தூர் அல்லது புரா உலுன் தானு எனும் உலுன் தானு பத்தூர் கோயில் முதன்முதலில் 17-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கோயில், விஷ்ணு .கடவுளாருக்கும்; பாலியின் பெரிய ஏரியான பத்தூர் ஏரியின் தெய்வமான தேவி தானுவிற்கும் கட்டபட்டுள்ளது.
பாலியின் மிகப்பெரிய ஏரியான பத்தூர் ஏரி, பாலியின் வேளாண்மைக்கு முதன்மை நீர் ஆதாரமாகவும்; பாலி தீவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.[2]
1917-ஆம் ஆண்டு பத்தூர் மலை வெடிப்பதற்கு முன்பு, பத்தூர் கோயிலும் மற்றும் பத்தூர் கிராமமும்; பத்தூர் மலையின் தென்மேற்கு அடிவாரத்தில் அமைந்திருந்தன. 1917-ஆம் ஆண்டு நிகழ்ந்த எரிமலை வெடிப்பின் கற்குழம்பு ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
பத்தூர் மலை வெடிப்பு
[தொகு]அழிவுகள் நட்ந்த போதிலும், கருப்பு கற்குழம்புகளின் சரிவு, உலுன் தானு பத்தூர் கோயிலின் வாயில்களில் வரை வந்து நின்றது. கோயிலை அடைவதற்கு முன்பே எரிமலைக்குழம்பு நின்றதால், பாலி மக்கள் அதை ஒரு நல்ல சகுனமாகக் கருதி அப்பகுதியில் தங்க முடிவு செய்தனர்.[3]
ஏப்ரல் 21, 1926 அன்று, பத்தூர் மலை மீண்டும் வெடித்தது; இந்த முறை காராங் அன்யார் கிராமம் முழுவதையும் அழித்தது. கற்குழம்பு கோயிலை நோக்கி முன்னேறி, கிட்டத்தட்ட முழு வளாகத்தையும் மூடியது. கிராமம் அழிபட்டு, 1,500 கிராமவாசிகள் இறந்த போதிலும், பத்தூர் கோயிலின் 11 அடுக்கு பிரதான கோயில் மட்டும் தப்பித்தது.[3] வெடிப்பின் போது பத்தூர் மலையைச் சுற்றியுள்ள பகுதி, மக்கள் வசிக்கத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டதால் காராங் அன்யார் கிராம மக்கள் இடம்பெயர வேண்டியிருந்தது.[4]
அமைப்பு
[தொகு]உலுன் தானு பத்தூர் கோயில் ஒன்பது வெவ்வேறு துணைக் கோயில்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 285 சன்னதிகள் மற்றும் மண்டபங்களைக் கொண்டுள்ளது. நீர், வேளாண்மை, புனித நீரூற்றுகள், கலை, கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளன.
பிரதான கோயிலான பெனராத்தான் அகோங் பத்தூர் கோயில் (Pura Penataran Agung Batur) ஐந்து முக்கிய முற்றங்களைக் கொண்டுள்ளது.[5]
மேலும் காண்க
[தொகு]- பாலி மக்கள்
- பாலி இராச்சியம்
- பாலி யாத்திரை
- பாலி வழிநடப்பு
- பாலி இந்து சமயம்
- பசிபிகா அருங்காட்சியகம், பாலி
- பாலி இராச்சியத்தின் அரசர்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cultural Landscape of Bali Province: The Subak System as a Manifestation of the Tri Hita Karana Philosophy".
- ↑ 2.0 2.1 Hood 2010, ப. 33.
- ↑ 3.0 3.1 Ketut Gobyah & Jro Mangku I Ketut Riana 2018.
- ↑ Hood 2010, ப. 35.
- ↑ "Ulun Danu Temple Batur". Wonderful Bali. Wonderful Bali. 2018. Retrieved April 29, 2018.
மேலும் படிக்க
[தொகு]- Ketut Gobyah; Jro Mangku I Ketut Riana (2018). "Pura Ulun Danu Batur". Babad Bali. Yayasan Bali Galang. Archived from the original on November 22, 2017. Retrieved April 29, 2018.
சான்றுகள்
[தொகு]- Auger, Timothy, ed. (2001). Bali & Lombok. Eyewitness Travel Guides. London: Dorling Kindersley. ISBN 0751368709.
- Stuart-Fox, David (1999). Fox, James J. (ed.). Religion and Ritual: Balinese Hindu Temples. Indonesian Heritage. Singapore: Archipelago Press. ISBN 9813018585.
- Hood, Made Mantle (2010). Triguna: A Hindu-Balinese Philosophy for Gamelan Gong Gede Music. SoundCultureStudies. Vol. 2. Münster: LIT Verlag. ISBN 9783825812300.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் உலுன் தானு பத்தூர் கோயில் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- A Thousand Years in Bali (documentary)
- Direct Water Democracy in Bali
- Pura Batur on Global Heritage Network