உள்ளடக்கத்துக்குச் செல்

உலர் கண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடுமையாக உலர்ந்த கண்

உலர் கண் (Dry Eye), கண்களுக்கு போதுமான கண்ணீர் இல்லாதபோதும், வழக்கத்திற்கு மாறாக கண்ணீர் அதிகமாக ஆவியடைந்தாலும் கண் எரிச்சலடையும் நிலை உண்டாவதால் ஏற்படுகிறது. இது போன்ற நேரங்களில் கண்கள் வறண்ட நிலையிலும், சிவப்பு நிறத்திலும் இருக்கும். [1]

காரணங்கள்

[தொகு]

கண்ணீர் உற்பத்தியை பாதிக்கும் எந்த ஒரு காரணியாலும் உலர் கண் தோன்றலாம். இவை உண்டாவதற்கான பொதுவான காரணிகள்:

  • வயதாவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  • ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள்
  • அதிக சூரிய ஒளி, அதிக காற்று அல்லது வறண்ட வானிலை
  • காண்டாக்ட் லென்ஸ்
  • கண்களில் காயம்
  • பிற கண் நோய்கள்
  • ஸ்டிராய்டு மருந்துகளைத் தவறான அளவுகளில் எடுத்துக் கொள்ளுதல்
  • முடக்கு வாதம் போன்ற ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும் நோய்கள்

அறிகுறிகள்

[தொகு]

பெரும்பாலான மக்கள், அறிகுறிகளை ஓரளவிற்கு உணர்வார்கள். சிலர் கடுமையான விளைவுகளுடன் கூடிய வலியை உணர்வார்கள்.

  • வறண்ட கண்கள் அல்லது கண்களில் புண்
  • கண்களில் சிவப்பு
  • தூங்கி எழுந்திருக்கும்போது கண் இமைகள் ஒட்டிக் கொள்ளுதல்
  • கண்களில் அதிகமாக நீர் வழிதல்

சிகிச்சை

[தொகு]

கண்களில் போதுமான கண்ணீரைப் பராமரிக்க, மருத்துவர் செயற்கை கண்ணீரை மருந்துகளாகப் பரிந்துரைப்பார். இந்த மருந்து, சொட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படும். முடக்கு வாதம் போன்ற ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் வறண்டால் கண்ணீரைப் பாதுகாக்க வேண்டும். பொதுவாக உடல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கண்ணீர் குழாயிலிருந்து அதிகமாக கண்ணீர் வெளியேறாமல் இருக்க, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலர்_கண்&oldid=3852176" இலிருந்து மீள்விக்கப்பட்டது