உள்ளடக்கத்துக்குச் செல்

உலமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலமா (ulamā), இசுலாம் சமயத்தில் உலமா என்பதற்கு இசுலாமியக் கல்வி கற்றவர்கள் என்று பொருள்[1].இவர்களை மௌல்வி என்றும் அழைப்பர்.

உலமாக்கள் இஸ்லாமிய கோட்பாடு, சட்டத்தின் அறிஞர்கள் மற்றும் நீதிபதிகள். அவர்கள் இஸ்லாத்தில் மத அறிவின் பாதுகாவலர்கள், உரைபெயர்ப்பாளர்கள் மற்றும் சட்டம் இயற்றும் உறுப்பினர்களாகக் கருதப்படுகிறார்கள்.

"உலமா" என்பது இறையியலாளர்கள், நியதி வழக்கறிஞர்கள் (முஃப்திகள்), நீதிபதிகள் (காதிகள்), பேராசிரியர்கள் மற்றும் உயர் அரசு மத அதிகாரிகள் உள்ளிட்ட மத அறிஞர்களின் படித்த வகுப்பைக் குறிக்கலாம். மாற்றாக "உலமா" என்பது ஒரு இஸ்லாமிய அரசின் பதவிகளை வகிப்பவர்களைக் குறிப்பாகக் குறிக்கலாம்.[2]

உலமாக்கள் மதராசாக்களில் குர்ஆன் மற்றும் சுன்னா (உண்மையான ஹதீஸ்) போன்ற பாரம்பரிய இஸ்லாமியக் கல்வி கற்கிறார்கள்.[3]

தமிழ்நாடு உலமாக்கள் நல வாரியம்

[தொகு]

தமிழ்நாடு அரசில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள இஸ்லாமியப் பள்ளிவாசல்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைத்தாக்கள், ஆஷுர்கானாக்கள், முஸ்லிம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் உலமாக்கள், இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பிலால்கள், முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலைகளின் மேம்பாட்டிற்காக உலமாக்கள் பணியாளர்கள் நல வாரியம் செயல்படுகிறது.இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்த (18-60 வயது நிறைவு செய்த) உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

தகுதிகள்

[தொகு]
  • இசுலாம் மதத்தைச் சோந்து உலமாக்கள் மற்றம் பணியாளாகள் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு மட்டும்.

நடைமுறைகள்

[தொகு]
  • மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினா நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brown, Jonathan A.C. (2014). Misquoting Muhammad: The Challenge and Choices of Interpreting the Prophet's Legacy. Oneworld Publications. p. 3. ISBN 978-1-78074-420-9. The ulama (literally, the learned ones);
  2. "ʿulamāʾ (Islam)". Encyclopaedia Britannica. Retrieved October 16, 2023.
  3. Zaman, Muhammad Qasim (2007). The Ulama in Contemporary Islam: Custodians of Change. Princeton University Press. p. 1. ISBN 978-0-691-13070-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலமா&oldid=4480408" இலிருந்து மீள்விக்கப்பட்டது