உலக மொழிகளில் எண் பாகுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலக மொழிகளி்ல் எண் பாகுபாடு

மொழிகளில் காணப்படும் எண்ணுப் பெயர்கள் அம்மொழிகளின் தொன்மையை அறியச் செய்வன. நாகரீகம் பெற்ற மக்கள் நாகரீகம் பெறாத மக்களைக் காட்டிலும் தொகுப்பு எண்ணிக்கையாக (ஐந்தையந்து, பத்துப்பத்து) எண்ணுகின்றனர்.

பழங்குடி மக்களின் எண்ணிக்கை முறை[தொகு]

வளர்ச்சி பெற்ற மொழிகளில் பத்துப்பத்தாக எண்களை அமைத்து எண்ணும் முறை காணப்படுகிறது. வளர்ச்சி பெறாத மொழி பேசும் மக்கள் மூன்றுக்கு மேல் எண்ண இயலாதவர்களாக இருப்பதை மு.வ. மொழி வரலாறு இயம்புகிறது. விக்டோரியாவில் வாழ்ந்த பழங்குடிகளும், நியூ ஹாலந்தின் மக்களும் 'காம்' புதர் மக்களின் மொழியிலும் இந்நிலையே உள்ளளது. அமெரிகாகாவின் பழங்குடி மொழிகளில் ஒன்றாகிய அல்கோன்கின் மொழியில் ஐந்து வரையில் எண்கள் உள்ளன.

நாகரிக மொழிகள்[தொகு]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகள் நாகரிகம் பெற்ற மொழிகளாக கருதப்படுகின்றன. இம்மொழிகளில் பத்துப்பத்தாக எண்ணி நூறு, ஆயிரம், நூராயிரம், கோடி என எண்ணும் முறை அமைகிறது. தமிழ் எண்களில் அரை, கால், அரைக்கால், மா (1/20) காணி (1/80) முந்திரி (1/320) என நுணுகிப் பகுத்திடும் முறை ஒழுங்காகவும், செம்மையாகவும் அமைந்துள்ளது. இத்தகைய கீழ்வாயிலக்கம் தொன்று தொட்டு வந்துள்ளது என்பதற்கு கல்வெட்டுகள் சான்றாக அமைகின்றன.

ஆங்கிலத்தில் எண்ணும் முறை[தொகு]

சில மொழிகளில் பத்துப்பத்தாக எண்ணாமல், பன்னிரண்டு பன்னிரண்டாக எண்ணும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஆங்கிலத்தில் One, Two, Three என எண்ணும் முறை பத்திற்கு மேல் Ten One, Ten Two என்று அமையாமல் Twenty One, Twenty Two என்பது போல் அமைந்துள்ளது.

டச்சு மொழி[தொகு]

டச்சு மொழியில் இருபது இருபதாக எண்ணும் முறை கலந்துள்ளது. பாஸ்க் மொழியில் இதுவே முற்றிலும் உள்ளது. முப்பத்தெட்டை தமிழில் மூன்று பத்தும் எட்டும் என்போம். பாஸ்க் மொழியில் இருபதும், பதினெட்டும் என்பர். பிரெஞ்சு மொழியிலும் இருபதாக எண்ணும் முறை உள்ளது. அறுபத்தொன்றிலிருந்து எழுபத்தொன்பது வரை பிரெஞ்சு எண்கள் அறுபது எண்ணும் எண்ணின் மேல் வளர்ந்தனவாக அமைந்துள்ளது. பிரெஞ்சு மொழியினர் எழுபது என்பதை அறுபதும், பத்தும் என்பர்.

தொடக்கக் கால மனிதன்[தொகு]

தொடக்கக் கால மனிதன் எண்ணுவதற்கு கை விரல்களை பயன்படுத்தியதால் பத்துப் பத்தாக எண்ணும் முறை வந்ததாகக் கொள்ளலாம். தமிழ்நாட்டு சிற்றூர்களிலும் ஒரு கை என்றால் ஐந்து என்று கொள்ளும் வழக்கம் காணப்படுகிறது. தமிழர் க, உ, ங, நு, ரு, ச, எ, அ, கா, ய, ள, சா என மற்ற எழுத்துக்களையே சிறு வேறுபாட்டுடன் எண்களைக் குறிக்க வழங்கினர். இக்காலத்தில் பத்திற்கு இரண்டாவது இடமும், நூறுக்கு மூன்றாவது இடமும், ஆயிரத்திற்கு நான்காவது இடமும் கொடுத்து எழுதும் முறை அக்காலத்தில் இல்லை. இதை எள அயரு என எழுதுவதே பழைய தமிழ் எண் முறையாகும்.

அரபி எண்கள்[தொகு]

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்று உலகெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என கூறப்படுகின்றன. என்றாலும் அரபியர்களுக்கு இது குறித்த வரலாறு தெரிய வரவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் எண்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

1. மொழி வரலாறு - மு.வரதராசனார் 2. அரபி எண் முறை 3. டச்சுமொழி 4. அல்கோன்கின் 5. மா, காணி, முந்திரி